Tuesday, 23 April 2013

தற்காலத்திற்கேற்ற உடற்பயிற்சி.

 
 
தற்காலத்திற்கேற்ற உடற்பயிற்சி.
 
நினைவுக்கு எட்டாத காலமுதற்கொண்டே பருவநிலை, வாழ்க்கை முறை, இன்னும் இதர பழக்க வழக்கம் ஆகியவற்றைக் கொண்டு பல்வேறு நாடுகளில் பலவகையான உடற்பயிற்ச்சிகள் உருவாகியுள்ளன. முன்பு வாழ்க்கை முறை மெதுவாக ஊரும் (நகரும்) நிலியில் இருந்த தால் அதற்குத் தக்கவாறு உடற்பயிற்சிகள் உருவாக்கப்பட்டன. அந்தக் காலம் இப்போது மாறிவிட்டது. விரைவு, அழுத்தம், பரபரப்பு உள்ள சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம். நமது தேவைகளும் வேறு விதமாகி விட்டன. ஆகவே, முந்தைய உடற்பயிற்சிகள் இந்தக்கால சூழ்நிலைகளுக்கு ஏற்றவையாக.
 
இது சம்பந்தமாகப் பல ஆண்டுகள் நான் சிந்தித்து வந்தேன். பல விதமான ஆசனங்களையும், உடற்பயிற்சிகளையும் ஆராய்து பார்த்தேன். இப்பயிற்சிகளை நானே செய்து பார்த்து அதன் விளைவுகளை எனது உடல் மூலம் தெறிந்து கொண்டேன். இந்திய மருத்துவத் துறையில் எனக்கு இருந்த அறிவு இந்த ஆய்வுக்கு உதவியது. இருதியாக ஆடவருக்கும், பெண்டிருக்கும், குழந்தைகளுக்கும், பல்வேறு வாழ்க்கை நிலையில் இருப்பவர்களுக்கும், பல் வேறு கால நிலைக்கும் ஏற்றவாறு சில பயிற்சிகளை ஒழுக்கு படுத்தியுள்ளேன். இந்தப் பயிற்சிகளை ஒழுங்காகச் செய்வதால் உடலுக்குப் பிராணவாயு பரவி என்டோக்கிரின் சுரபிகள் இயக்கத்தை ஒழுங்கு படுத்தி, இரத்தத்தை சுத்தப்படுத்தி அதன் ஓட்டத்தை ஒழுங்கு படுத்துகிறது.
 
நோய் வராதபடி தடுப்பு நிலையை அதிகப்படுத்துகிறது. ஆரோக்கியமான உடம்பும், நீடித்த ஆயுளும் உண்டாகின்றன. அதன் மூலம் ஆனமீக தேட்டத்தில் வெற்றி பெற்று நான் இந்த மண்ணுக்கு எதன் பொருட்டு வந்தோமோ அதைத் தெளிவாகத் தெரிந்து  கொள்கிறோம். இந்தப் பயிற்சிகளை ஒழுங்காகச் செய்பவர்கள் நிச்சையம் நன்மை அடைவார்கள். எளிய முறை குண்டலினி யோகப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்தப் பயிற்சிகள் செய்து பழகுவதன் மூலம் பெரும் அளவில் நன்மை அடையலாம். இந்தப் பயிற்சிகள் அதற்கு அதிக அளவு உதவியாய் இருக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------அருள் தந்தை.
 
வாழ்க வையகம்.------------------------------------------------------------------------------- வாழ்க வளமுடன். 
தொடரும்.
 
 

Friday, 1 March 2013

உலக சமுதாய சேவா சங்கம்.


 
 
உலக சமுதாய சேவா சங்கம்.
 
நல்வாழ்வுக்கு வழிகாண வேண்டுமெனில், வாழ்வின் நலக்கேட்டுக்குக் காரணங்களை முதலில் அறிய வேண்டும். பழக்கத்தால் செயலும், கருத்தும் உருவாகி அவற்றுக்கு அடிமையாக வாழும் மக்களுக்கு விழிப் பூட்டி நல்வழிக்குத் திருப்புவது ஒரு சில நாளில், ஒரு சில மனிதரால் முடிக்கக்கூடிய செயலன்று.  ஒரு மனிதன் மக்கள் வாழ்வின் நோய்களுக்கு மருந்து கண்டு பிடிக்கலாம். அது சரியானது தானா என்று நேர்மையில் சிந்தித்து முடிவெடுக்க, விளக்க அறிவு பெற்றவர்கள் உலகில் பெருக வேண்டும்.
 
பல துறைகளிலும் பல நாட்டிலும் வாழும் மக்களுடைய அறிவு மயக்க நிலையிலிருந்து விடுபட்டு விளக்க நிலை பெறத்தக்க சூழ்நிலையும், வாய்ப்பும் பெருக வேண்டும். செல்வந்தர்கள், அரசியல் தலைவர்கள், வணிகர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் இவர்கள் பலரிடம் இன்று உலக நல நோக்கம் மிகுந்து வருகின்றது.
 
அவர்களுடைய ஒத்துழைப்பால் ஓருலகப் பண்பாட்டு அரங்கு நிறுவி அதன் மூலம் திட்டமித்த முறையில் மக்கள் பண்பாட்டை உயர்த்த வேண்டும். விஞ்ஞான அறிவு பெருகியுள்ள இக்காலத்தில் இளைஞர்களுடைய உள்ளத்தைத் தொட்டு, ஊக்கி நலம் பெருக்கும் நிறுவனம் செயல் புரிய வேண்டும். ஆம், இதனை யார் தொடங்குவது? எப்படி மக்களை மயக்க நிலையிலிருந்து விள்ள நிலை வாழ்வுக்கு மாற்றுவது?  மக்கள் நலம் பேசிப் பேசி மாண்டவர்கள் எண்ணிக்கை கொஞ்சமன்று.
 
சீரிய திட்டங்களும், அவற்றால் விளைந்த பயன்களும் எடுத்துக் காட்ட முடியவில்லையே! மீண்டும் இச்சோர்வு மனப்பான்மையில் வினாக்கள் எழுகின்றன. ‘உலக சமுதாய சேவா சங்கம்’ என்னும் நிறுவனமே தக்க பதிலாக இயங்குகின்றது.
 -------------------------------------------------------------------------------------------------அருள் தந்தை.
வாழ்க வையகம் --------------------------------------------------------------வாழ்க வளமுடன்.
தொடரும்
 
 

Thursday, 17 January 2013

உண்மை நிகழ்ச்சிகள்.





உண்மை நிகழ்ச்சிகள்.

ஒவ்வொருவருக்கும் இவ்வுலக மீது பிறக்கிறோம். மனித இனம் வாழ்ந்துகண்ட அனுபவம், வாழும் மக்களின் கூட்டுறவு, இவைகளின்,துணையையும் பயனையும் கொண்டு வாழ்கிறோம், இன்ப துன்பம் அடைகிறோம், பின்னர் இறந்து விடுகிறோம்.

இந்த நியதி எல்லோருக்கும் பொது. இந்த உண்மையை மறக்காது, விழிப்புடன் இருக்கும் அறிவின் பண்பாட்டுடன், அறிவியும் உடலையும் பண்படுத்தி-பயன்படுத்தி- உலக வாழ்க்கையைச் சிறந்த முறையில் அனுபவிப்பதற்காக. இயற்கைக்குப் பொருத்தமான வாழ்க்கை முறையை வகுத்துப் பூரண அமைதி பெற முயற்சி செய்வோம்.

மனிதனின் வாழ்க்கைத் தத்துவத்தை அறிந்து, பிறப்பு இறப்பு இடையே, அறிவியக்கக் காலத்தில் மட்டும் ஏற்படும் இன்ப துன்ப தோற்றம், மாற்றம் என்ற மாறுபாடுகளையும் மனதில் கொண்டு, அமைதியாக வாழத் திட்டங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைவு படுத்திகிறோம்.

---------------------------------------------------------------------------அருள்தந்தை

வாழ்க வையகம்------------------------------------------வாழ்க வழமுடன். 

தொடரும்.

Saturday, 29 December 2012

எல்லாம் நன்மையே





எல்லாம் நன்மையே.

துன்பத்தை மாத்திரம் நினைத்துக் கொண்டிருந்தால் அது தொல்லையாகவே இருந்திருக்கும். அது மாத்திரம் அன்று, ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடக்கிறபோது காலத்தாலும், இடத்தாலும் வல்ல இறைநிலையானது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கக் கூடிய அறிவுறை,  அனுபவ உரை, அனுபவ ஞானம், அப்படித் தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.  அப்படி எடுத்துக் கொண்டோமானால் எந்தத் துன்பத்துக்கும் காரணத்தைக் கண்டுபிடிக்கிற போது இதிலிருந்து விளையக் கூடிய நன்மையெல்லாம் விளுங்கி விடும். உண்மையில் எல்லாம் நன்மையாகத்தான் ஏற்படும்.

அப்படிப் பார்க்கின்ற போது துன்பம் வருகிறது என்று கவலைப் படுகின்றோமா, துன்பன் வரக்கூடாது என்று எண்ணுவதால் தான் அந்தக் கவலை, துன்பம் என்றால் மனதுக்கு ஒவ்வாதது அல்லது உடலில் நோய், இது இரண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது எங்கே போகும்?  மனிதனிடம் தானே வர வேண்டும்.  இடம் கொடுக்க க்கூடிய மனிதனிடம்தானே வரும். என்னிடம் அந்தத் துன்பம் வந்தது என்றால் அதற்கு நான் இடம் கொடுத்து விட்டேன் என்று தானே பொருள். இப்போது அந்த இடத்தை நிரப்ப வேண்டும்.

நான் பிறந்தேன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு முடியப் போகிறேன். இதற்கு மத்தியில் எவ்வளவு இருந்த போதிலும் கூட, சீரணிக்கக் கூடிய அளவிற்கு மேல் சாப்பிடப் போவதில்லை, உடல் தாங்குகிற அளவுக்கு மேல் துணியைப் போடுவதில்லை, நின்றால் கால் அளவு, படுத்தால் உடலளவு, இதற்கு மேல் பூமியை அனுபவிக்கக் கூடியவர்களும் இல்லை. வரும்போது கொண்டு வருவதில்லை. போகும் போது கொண்டு போகப் போவதும் இல்லை. இந்த உண்மையை அப்படியே மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். அப்போது நமக்கு எந்தெந்த இடத்திலே என்னென்ன கிடைக்கிறதோ, அது நிறைவாகத்தான் இருக்கும். வாழ்க்கையை ஒட்டிப் பார்த்தீர்களானால், எல்லோருக்கும் நிறைவாகத்தான் இருக்கிறது. இப்படியே உலகம் முழுக்கப் பார்த்தோமானால் எந்த இடத்திலும் யாருக்கும் குறைவே கிடையாது. குறைவு என்பது இல்லை.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)