Davaram,I.P.S., |
ஆளுமைத் திறன்.
இயற்கை வளங்களை வாழ்வில் வழமாக உருமாற்றியும் அழகு படுத்தியும் வாழ்ந்து வரும் மனித இனம் மற்றவர்களோடு பிணக்கின்றி வாழ வேண்டியது மிக அவசியமாகின்றது. இந்த நெறியே அறம் எனப்படுகிறது. இந்தப் பெருநோக்கத்தில் வாழ மனதையும் செயல்களையும் சிந்தனையின் உயர்வுக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ளவேண்டும். பல ஆயிரம் தலைமுறைகளாக ஆற்றிய எண்ணம், செயல் பதிவுகளால் வடிவம், தரம், திறம் அமையப்பெற்ற மனிதன் தனது ஆளுமை வளத்தைச் சிறப்பித்துக் கொள்ள வேண்டுமெனில், அதற்கு ஏற்ற உளப் பயிற்சியம் செயல் பயிற்சியும் வேண்டும். புலன்கள் மூலம் உணர்ச்சி நிலையில் வாழும் மனிதனுடைய மன அலைச்சுழல் வினாடிக்கு 14 முதல் 40 வரையில் (Beta Wave) இயங்கிக் கொண்டிருக்கிறது. சிந்தனையாற்றல் பெருக வேண்டுமெனில், மனம் வினாடிக்கு 14 சுழலுக்குக் குறைவான அலை இயக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
மனித அமைப்பில் பரு உடல்(Physical Body),நுண்ணுடல்(Astral Body) பிரணவ உடல் அல்லது சீவகாந்த உடல் (Causal Body) ஆகிய மூன்றும் ஒன்றுக்குள் ஒன்றாக இணைந்து செயல்புரிகின்றன.சூக்கும உடலாகிய உயிர்த்துகள் மீது (Life Force) மனம் வைத்து அகநோக்கும் பயிற்சியினைப் பழக வேண்டும். இந்தப் பயிற்சியில் அனுபவம் பெற்றவர் மூலமே இதை உணர்ந்து பழகும் பயிற்சியே அகநோக்குப்பயிற்சி எனப்படுகிறது. இப்பயிற்சியால் மன அலைச்சூழல் படிப்படியாகக் குறைந்து வினாடிக்கு 1லிருந்து 3 வரையில் வருமேயானால் மனம் அமைதி நிலைக்கு வரும். இந்த மன நிலையில் மனம், உயிர், இறைநிலை என்ற மூன்று மறைபொருட்களையும் உணரும் திறமை மனித மனதுக்குக் கிடைக்கும். தேவையில்லாத, துன்பமே தரும் பதிவுகளை மாற்றி ஆழுமை வளத்தைச் சிறப்பித்துக் கொள்ளவும், இந்தப் பயிற்சியோடு அகத்தாய்வுப் பயிற்சிகளையும் பயின்று செய்தால் மனிதனுள் அடங்கி இருக்கும் ஆற்றல்கள் முழுவதையும் வெளிப்படுத்திப் பயன் கண்டு தானும் சிறப்பாக வாழ்வதோடு, குடும்பம், சுற்றம், ஊர், உலகம் என்ற அளவில் தன் கடமைகளைச் செய்து நிறைவு பெறலாம். அமைதியும் இன்பமும் பெறலாம்.
----------------------------------------------------------------------அருள் தந்தை.
வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்
----------------------------------------------------------------------(தொடரும்)
No comments:
Post a Comment