Saturday, 24 December 2011

வெற்றி பெற வழி.




வெற்றி பெற வழி.

தனக்கும், பிறருக்கும் தற்காலத்திலும், பிற்காலத்திலும் துன்பம் வராத செயல்கள் செய்ய வேண்டும். கூடுமான வரையில் பிறருக்கு உதவ வேண்டும்.  இதுதான் வேதங்கள், புராணங்கள் சொல்லும் சாரம். (Essence) ஆகும்.

ஏதோ சந்தர்ப்ப வசத்தால் பிறருக்கு துன்பம் வந்து விடுகிறது. அவர்களால் தீர்த்துக் கொள்ள முடிவதில்லை. அப்போது இயன்ற வரையில் நாம் அப்படிப்பட்டவர்களின் துன்பத்தைத் தீர்கின்றபோதும், அதனால் நமக்குத் துன்பம் வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நமக்குத் துன்பம் வந்து, நாம் பிறரிடம் போய் அதைத் தீர்க்கும்படி கெஞ்சும் நிலை வந்து விடக்கூடாது. அல்லவா? அந்த நிலையில் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும். தனக்கும் துன்பமில்லாது, பிறருக்கும் துன்பம் விளைவிக்காத வாழ்க்கையில், நமக்கு என்னென்ன தேவையோ, அப்படிப்பட்ட சூழ்நிலை தானாகவே அமையும். இதற்காகக் கெஞ்சிக் கேட்டு ஒன்றும் நாம் பெற வேண்டியதே இல்லை.

எந்த இடத்திலே, எந்தக் காலத்திலே, எந்த நோக்கத்தோடு, எந்த செயலை நீ எவ்வளவு திறமையாகச் செய்கிறாயோ அதற்குத் தகுந்த வாறே உனக்கு விளைவும் வரும். வெற்றுயும் வரும்.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Wednesday, 21 December 2011

வாழ்த்து.


பாஸ்கர்.


வாழ்த்து.

வாழ்த்து எல்லா மந்திரங்கட்கும் மேலான  திருமந்திரமாகும். ஒருவரை நாம் வாழ்த்தும் போது அந்த உயிருக்கும் நம் உயிருக்கும் ஒரு உயிர்த் தொடர்பு – சங்கிலித் தொடர்பு ஏற்பட்டு வாழ்த்து அதன்மூலம் பயந்து வேலை செய்யும். ஒருவரை நாம் வாழ்த்தும் தகுதியைப் பெறுகிறோம். அந்த அளவுக்கு நமது பெருந்தன்மை தானே வளர்ச்சியடைகிறது. இந்த வாழ்த்து பேரறிவில் பதிவாகி, அதன் மூலம் அடிமனதிற்கும் பரவி, நாளாக நாளாக நட்புணர்ச்சி வளர உதவும், வெறுபுபணர்ச்சி தானே மறைந்து விடும்.

ஒற்றுமையின்றி பிணங்கி நிற்கும் ஒரு மகனைத் தந்தை தினசரி வாழ்த்திக் கொண்டே இருப்பாரானால் இருவருக்குமிடையேயுள்ள உயிர் தொடர் மூலம் அவ்வாழ்த்துப் பரவி மகனுடைய மூளையில் பதிந்து அவனைச் சிறுகச் சிறுகத் திருத்தி, தகப்பன் விருப்பப்படி நடக்கும் படி செய்து விடும். கணவன் மனைவியிடையேயும் இப்படித்தான். இது நான் அனபவமாகப் பல குடும்பங்களில் கண்ட உண்மையாகும்.

வாழ்த்தின் மூலம் தேவையான எல்லா நன்மைகளும் கிட்டும். ஆதலால் தான், கடவுளைக் கூட வாழ்த்தும் பக்தர்களையும் பக்திப் பாடல்களையும் நாம் பார்க்கிறோம். கடவுளை வாழ்த்துவதன் மூலம் எல்லோரையும் வாழ்த்தும் நற்பழக்கத்தை மனிதன் ஏற்படுத்திக் கொண்டான். இதனால் மனவளம் பெருகுவது நிச்சையம்.

"அருட்பேராற்றல் கருணையினால்
உடல் நலம், நீளாயுள், நிறைச்செல்வம்,
உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க
வளமுடன்’ என்று வாழ்த்திப் பயன்பெறுவோம்."

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Tuesday, 13 December 2011

வாழ்வாங்கு வாழ வழி.






வாழ்வாங்கு வாழ வழி.

நாம் வாழும் காலத்தில் உடலையும் மனத்தையும் சரிப்படுத்திக் கொண்டால், நமக்குப் பின்னாலே பிறக்கக் கூடிய குழந்தைகள் எப்படியிருக்கும் என்று பார்த்தீர்களானால் அவை ஆரோக்கியமான கட்டமைப்புக் கொண்டதாகத் திகழும்

அவ்வாறு நல்ல குழந்தைகளை உலகுக்குத் தருவதற்கு நமது உடற்பயிற்சி, தியான முறை இரண்டு வாய்ப்பு அளிக்கும். வேலைப்பழு அதிகமாகும் போது, ஊதியம் தராத உடற்பயிற்சி, தியானம் இவற்றை முதலில் நிறுத்தி விடலாம் என்று எண்ணாது, உள்ளூர இயங்கி வரும் இறைச் சக்திக்குத் தொண்டு செய்யும் வகையிலே உடற்பயிற்சி,  உளப்பயிற்சி செய்து நாளுக்குநாள் மகிழ்ச்சியும் இனிமையும் பெற்று வாழ வேண்டும்.

தினந்தோரும் நாம் காலையிலிருந்து மாலைவரை குடும்பத்தில் பலவகைப் பொருட்களையும், பண்டங்களையும் கையாளுகின்றோம்.  சமையல் பாத்திரங்களையே எடுத்துக் கொள்ளுங்களேன். சுத்துப்படுத்தி வைத்தால் தானே அவை மறுநாளைக்கு உதவும்? அதே போல தினந்தோரும் மனதையும், உடலையும் உபயோகிக்கிறோம், அவற்றில் அவ்வப்போது ஏற்படக்கூடிய களங்கங்களைப் போக்கி, மீண்டும் புதிதாக நாளைய உபயோகத்திற்குத் தயராக வைத்துக் கொண்டால் தானே நன்றாக இருக்கும்?

உடலுக்குக் கொடுக்கக்கூடிய உடற்பயிற்சி, மனதிற்குக் கொடுக்கக்கூடிய தியானம்ப் பயிற்சி உயிர்க்குறுதி அளிக்கும் காயகல்பப்பயிற்சி இம்மூன்றும் உடலையும், உள்ளத்தையும், உயிரையும் மேன்மைப்படுத்தி, தூய்மைப்படுத்தி மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி வகுப்பனவாகும்.,

----------------------------------------------------------------------அருள் தந்தை
வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)