பாஸ்கர். |
வாழ்த்து.
வாழ்த்து எல்லா மந்திரங்கட்கும் மேலான திருமந்திரமாகும். ஒருவரை நாம் வாழ்த்தும் போது அந்த உயிருக்கும் நம் உயிருக்கும் ஒரு உயிர்த் தொடர்பு – சங்கிலித் தொடர்பு ஏற்பட்டு வாழ்த்து அதன்மூலம் பயந்து வேலை செய்யும். ஒருவரை நாம் வாழ்த்தும் தகுதியைப் பெறுகிறோம். அந்த அளவுக்கு நமது பெருந்தன்மை தானே வளர்ச்சியடைகிறது. இந்த வாழ்த்து பேரறிவில் பதிவாகி, அதன் மூலம் அடிமனதிற்கும் பரவி, நாளாக நாளாக நட்புணர்ச்சி வளர உதவும், வெறுபுபணர்ச்சி தானே மறைந்து விடும்.
ஒற்றுமையின்றி பிணங்கி நிற்கும் ஒரு மகனைத் தந்தை தினசரி வாழ்த்திக் கொண்டே இருப்பாரானால் இருவருக்குமிடையேயுள்ள உயிர் தொடர் மூலம் அவ்வாழ்த்துப் பரவி மகனுடைய மூளையில் பதிந்து அவனைச் சிறுகச் சிறுகத் திருத்தி, தகப்பன் விருப்பப்படி நடக்கும் படி செய்து விடும். கணவன் மனைவியிடையேயும் இப்படித்தான். இது நான் அனபவமாகப் பல குடும்பங்களில் கண்ட உண்மையாகும்.
வாழ்த்தின் மூலம் தேவையான எல்லா நன்மைகளும் கிட்டும். ஆதலால் தான், கடவுளைக் கூட வாழ்த்தும் பக்தர்களையும் பக்திப் பாடல்களையும் நாம் பார்க்கிறோம். கடவுளை வாழ்த்துவதன் மூலம் எல்லோரையும் வாழ்த்தும் நற்பழக்கத்தை மனிதன் ஏற்படுத்திக் கொண்டான். இதனால் மனவளம் பெருகுவது நிச்சையம்.
"அருட்பேராற்றல் கருணையினால்
உடல் நலம், நீளாயுள், நிறைச்செல்வம்,
உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க
வளமுடன்’ என்று வாழ்த்திப் பயன்பெறுவோம்."
----------------------------------------------------------------------அருள் தந்தை.
வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்
----------------------------------------------------------------------(தொடரும்)
No comments:
Post a Comment