Sunday, 13 May 2012

கட்டாயம் கற்க வேண்டிய தொழில்கள்.




கட்டாயம் கற்க வேண்டிய தொழில்கள்.

1விவசாயம், 2. நெசவு, 3. சமையல், 4. வீடுகட்டல், 5. இயந்திரரங்கள், விஞ்ஞானக் கருவிகள் இவற்றின் நுட்பங்கள் அறிந்த அவற்றை இயக்குதல், உற்பத்தி செய்தல் ஆகிய ஐந்து அடிப்படைத் தொழில்களையும், ஒவ்வொருவரும் இருபது வயதுக்குள்ளாகக் கற்றுக்கொள்ளவும், மேலும் யார்யாருக்கு எந்தெந்தத் தொழிலில், கலைகளில் விருப்பம் இருக்குமோ, அவைகளைக் கற்றுத் தேரவும், உலக மக்கள் வாழ்க்கைத் தேவைகளை அறிந்து அவைகளின் திறமை, சக்திகளைப் பயன்படுத்தும் புதிய முறையில் மனித குல வாழ்க்கையை இன்பமயமாக்கவும் தகுந்த முறையில் நாம் தொழில் கல்வி முறையை வகுக்கவேண்டும்.
உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும், மனித வாழ்விற்கு இன்றியமையாத மேலே காட்டியுள்ள ஐந்து அடிப்படைத் தொழில்களையும் கட்டாயம் கற்கவும், அவரவர்களின் சிறப்புத் திறமை, ஆர்வம் இவைகளுக்கேற்ப, குறிப்பான வேறு தொழில்கள் அல்லது கலைகளைக் கற்கவும் வசதி செய்யவேண்டும்.

ஒவ்வொரு குழந்தையும், தொழிற்கல்வி கற்கும் காலத்தில் மனோத த்துவம், சுகாதாரம், பொருளாதாரம்,  அரசியல் விஞ்ஞானம் என்ற ஐவகை வாழ்க்கைத் தத்துவத்தையும் வயதுக்கேற்றபடி அறிந்து, உயர் நோக்கச் செயல் திறமைகளையுடையவர்களாக வேண்டும்.

மனித இனத்திற்கு வாழ்க்கை – அறிவும், செயல் – திறமையும் தான் செல்வமாகும். அந்தச் செல்வம் குழைந்தகளிடத்திலே சிறுவயது  முதலே  வளர வேண்டும். இதுவரையில் மனிதன் அடைந்துள்ள  முன்னேற்றங்களின் இறுதிப் பயனாக இருக்க வேண்டியது உயர்தர முறையில் குழந்தைகளை வளர்பதேயாகும்.
----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்
----------------------------------------------------------------------(தொடரும்)

No comments:

Post a Comment