Thursday, 13 October 2011

அனபர்களுக்கு




அனபர்களுக்கு

அன்பர்கள் அமைதி, அன்பு, கருணை என்று பேசிக்கொண்டு இருப்பதோடு ஒவ்வொரு வினாடியும் அயரா விழிப்புடன் செயல்பட வேண்டும்.

நான் அறிவுதான்  மெய்பொருளின் அருள் விரிவு மலர்ச்சி தான் என்ற  உண்மை உணர்த்தும், உணரும் ஆர்வத்துடனும் மனவளக்கலை பயிலும் அன்பர்களே! தன்முனைப்பு எழாமலிருக்க, விழிப்போடிருங்கள். நீங்கள் எண்ணியவெல்லாம் அவ்வாறே நிலைபெறும் வெற்றியை அனுபவமாகக் காண்பீர்கள். உங்களுக்கென உரியவை அத்தனையும் இயற்கை நிலையில் ஏற்கனவே உள்ளன. அவற்றை யாரும் பறித்துவிட  இயலாது உங்கள் மனம் பக்குவப்பட, பக்குவப்பட அவை ஒவ்வொன்றாக உங்களிடம் வந்து சேரும்.

இன்னதுதான் இந்த அளவில், இந்த முறையில், இந்தக் காலத்திற்குள் வேண்டும் என்று எப்போதும் எதிர்பார்க்கும் (expectation) கற்பனை நிலை வரையறை (imaginary conditionings) க்குள் மனதை அழுத்தி விடவேண்டாம். நான் முன்னமேயே ஆற்றிய செயல்களின் பயன் காலத்தோடு விளைவாக வந்து கொண்டேதான் இருக்கும். இப்போது இனியும் செய்யப் போகும் செயல்களுக்கு ஏற்ற விளைவு சிறிது கூட பிறழாமல் எனக்கு வந்த சேரப் போகிறது என்ற உண்மையில் நம்பிக்கை கொள்ளுங்கள்.

இப்போது விழிப்போடு சிந்தித்து ஆற்றும் செயல்களினால் முன்வினையின் தீமையும் தடுக்கப்படும், எதிர்காலமும் இனிமையாக இருக்கும்.இந்தத் தத்துவம் இயற்கை நியதி. இதை உணர்ந்து மதிப்பளித்துச் செயல் புரிந்து நலம் பெற்று வாழ்வோம்.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Tuesday, 11 October 2011

வாழ்க்கைத் தத்துவம்




வாழ்க்கைத் தத்துவம்

வாழ்க்கையை விளக்கிக் கொண்டு, காரணத்தையும் உணர்ந்து கொண்டு நடத்தினால் அது வெள்ளத்தில் படகு விடுவதை ஒக்கும். மாறாக அவ்விளக்கம் இல்லாமல் நடத்தினால் அது வெள்ளத்தில் அகப்பட்ட துரும்பில் நிலையேயாகும்.

வாழ்க்கையோ, இயற்கை, சமுதாயம், தான் என்ற மூன்றின் இணைப்பில் நடைபெறுகிறது. இவற்றில் சமுதாயம் என்ற தத்துவத்தை ஆராய்வதே நாம் இப்போது எடுத்துக் கொண்டுள்ள வாழ்க்கைத் தத்துவ ஆராய்ச்சியாகும்.

வாழ்க்கை வெற்றி மிக்கதாக அமைய வேண்டுமாயின், நாம் இயற்கையையும், சமூதாயத்தையும் உணர்ந்து, மதித்தி வாழ வேண்டும். அதோடு எந்தக் காரியத்திற்காக இந்தப் பிறவியை எடுத்து வந்தோமோ, அந்த நோக்கத்திற்கு ஒத்ததாக அதாவது பிறவித் தொடரை முடித்துக் கொண்டு வீடு பேறு எய்த வேண்டும் என்ற அந்த உயரிய நோக்கத்திற்கு ஒத்ததாக வாழும்முறையை அமையவேண்டும். அப்போது தான் துன்பத்தைத்  தோற்றுவித்துக் கொள்ளாமலும் வாழலாம். தவறுதலாக நாம் தோற்றுவித்துக் கொள்ளும் துன்பத்திலிருந்தும் நம்மை நாம் காத்துக் கொள்ளலாம். எனவே, வாழ்க்கையின் தத்துவத்தைப் பற்றிய தெளிவான விளக்கம் பெற்று அதன்படியே வாழ்ந்து வரவேண்டும்.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Sunday, 9 October 2011

மனிதன்






மனிதன்

“அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது”. என்பது ஆன்றோர் வாக்கு. ஏன் அவ்வாறு கூறுகின்றனர்? மனிதன் ஒருவனால் தான் பிரவற்றைக் கண்டு நலன் உணர்ந்து அவைகளைப்போன்று போலி செய்து வாழ முடிகிறது. இயற்கைகளை மாற்றித் தன் வாழ்வின் மேம்பாட்டுக்குப் பயன் படுத்திக் கொள்ள முடிகின்றது. இவை எல்லாவற்றிக்கும் மேலாக, பிற எவருக்கும், எந்த ஒன்றுக்கும் இன்னல் பயவா இன்ப வாழ்வு வாழ முடிகின்றது. இவ்வாறு வாழ்வது தான் மனிதனின் இயற்கை.

எனவை தான், மனிதன் என்ற பெயறைப் பெற்றான். அதாவது எவன் ஒருவன் மனத்தை இதமாக வைத்துக் கொள்கிறானோ அவன் தான் மனிதன் என்ற பொருளில் இச்சொல் ஏற்பட்டுள்ளது. மனம் என்ற  சொல்லைப் பார்த்தால் அதுவும் இதே பொருளைத்தான் அழுத்த மாக உணர்த்துகின்றது. “மனம்” என்ற சொல் “மன்” என்ற வேர்ச்சொல்லின் அடியாகப்பிறந்தது. “மன்” என்றால் நிலையானது. அழியாமை என்று பொருள் ஆனால், நாமோ மனதைப் பேயாக, குரங்காக இருப்பதனை உணர்கிறோம்.

ஆனால், அதே மனத்தைத் தவத்தால், தற்சோதனையால், புறத்தே குதிக்காமல் அகத்தே ஆழ்ந்து ஆழ்ந்து தன்னையுணர்கின்ற மெய்யுணர்வு தோன்றிகிறது. அப்போதுதானே எல்லாவற்றுள்ளும், எல்லாமும் தன்னுள்ளும் இருப்பது உணரப்படுகின்றது. அந்த நிலையில் மனம் இதமாகிறது. இதனைத்தான் மனிதன் பெற வேண்டும்.

மனம் படைத்த மனிதன் (மன்+இதன்)  நிலைபேறான மெய்ப்பொருள் உணர்வு பெற்ற வாழ்வு வாழ வேண்டுமானால் மனம், மொழி, செயல் மூன்றிலும் இனிமை தொன்ற வாழ வேண்டும். இத்தகையவர்களைத்தான் வள்ளுவர் செம்பொருள் கண்டவர்கள் என்கிறார். மனதைத் தெளிந்து, மனம் நிலைத்து மக்களுக்கும் பிற உயிர் இனங்களுக்கும் மன இதமாய்த் தொண்டாற்றுகின்ற பெருமக்களே நிறை மனிதர்கள்.
----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்
----------------------------------------------------------------------(தொடரும்)

Saturday, 8 October 2011

தவமும் அறமும்.




தவமும் அறமும்.

தவத்தையும் அறத்தையும் நீங்கள் மிகச் சுலபமாகப் பற்றிச் செல்லும் முறையினை இப்போது உங்களுக்குச் சொல்கிறேன். தவம் எதற்காக என்றால் இறையுணர்வு பெற்று இறைவனோடு உறைவதற்காக. அறம் எதற்காக என்றால் இது வரையில் செய்த கர்மங்களின் அழுத்தத்தினால் எண்ணமும் செயலும் தோன்றிக் கொண்டே இருக்கின்றனவே, அதிலிருந்து செய்து செய்து நல்லனவே செய்யக்கூடிய அளவுக்குத்தீயன செய்யாது இருக்கக் கூடிய ஒரு தூய்மைக்கு வர வேண்டும்.

மனத்தூய்மை தவத்தினால் வரும், வினைத்தூய்மை செயலினால் வரும், நல்ல செயல் அறத்தினால் வரும். அதனால் இது வேண்டும். இந்த இரண்டையும் ஒருங்கே பார்ப்பதற்கு என்ன வேண்டும்? இந்த காலத்திற்கு வேண்டியது அது தான். அந்த அறம், தவம் இவற்றை வைத்துத்தான் இதுவரையில் இந்த உலகத்திலே ஏற்பட்ட மதங்களெல்லாம் அமைந்துள்ளன.

எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் இறை உணர்வைக் காட்டி அற-உணர்வை காட்டிடுவதாகவே இருக்கும். இந்த இரண்டும் தான் எல்லா மதங்களிலும் உள்ளன. இறை உணர்வுக்கு இறைவழிபாடு. உலக மக்களோடு தொடர்பு கொண்டு இனிமையாக- அதாவது ஆங்கிலத்தில் “harmony”  என்று சொல்கிறோமோ அவ்வாறு – வாழ்வதற்கு என்ன வேண்டும்? ஒழுக்கம், கடமை, ஈகை என்ற அறம் வேண்டும். இந்த அறநெறி உலக வாழ்க்கைக்கு அவசியம்.

தவநெறி, உளப்பயிற்சி, அறிவு மேன்மை இறைவனை அடைய இவை வேண்டும். இதுவரையில் மதங்களிளெல்லாம் அந்த உணர்வை ஏற்படுத்துவதற்காக இதெல்லாம் சொன்னார்கள். இப்பொழுது அதை விட இன்னும் இந்த விஞ்ஞான யுகத்திலே மிகவும் சுருக்கமாகத் தெரிய வேண்டுமானால் என்ன – அந்தச் செயலிலேயே சிவனைக் காணலாம்.                                                          

----------------------------------------------------------------------அருள் தந்தை.


வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்
----------------------------------------------------------------------(தொடரும்)

Thursday, 6 October 2011

தியானத்தின் நன்மைகள்.





தியானத்தின் நன்மைகள்.

விஞ்ஞானிகள் தியானம் செய்யும் மனிதனுடன் விஞ்ஞானக்
கருவிகளை இணைத்து, ஆராய்ச்சி செய்து பின் பல கருத்துக்
களைக் கூறியிருக்கிறார்கள். உடலளவில் ஏற்படும் நன்மைகள்-:

1.    தியானம் செய்வதினால் மூச்சு வாங்கி வெளியிடும் வேகம் 
கு   றைகிறது. இருதயத் துடிப்புக் குறைகிறது. ஆயுள் அதிகரிக்கிறது.
2.    (Blood Pressure) இரத்த அழுத்த நோய் குணமாகிறது.
3.    எல்லா நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கின்றது.
4.    உடலின் உஷ்ணம் சிறிது அதிகரித்துப் பிறகு படிப்படியாகக் குறைகிறது.
5.    உடல் முழுவதற்கும் நன்கு ஓய்வு கிடைக்கிறது.
6.    ஏற்கனவே கெட்டுப்போன செல்களை நீக்கிப் புதிய செல்களை உருவாக்குகின்றன.

இனி உள்ளத்தளவில் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம்:

1.   மனம் குவிகிறது. இதனால் மன ஆற்றல் அதிகரிக்கின்றது.
2.   மூளையின் உள்ள பல புதிய நூற்றுக்கணக்கான செல்கள் தியானத்தினால் ஊக்குவிக்கப்பட்டு இயங்க ஆரம்பிக்கின்றன. இதனால் அறிவு கூர்மை பெறுகிறது. எதையும் இளிதில் புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது.
3.   “As a man thinketh, so he becomes it”, “A man is what he thinks all day long”’ என்பது இன்றைய மனோதத்துவ நிபுனர்களின் கருத்து. அந்தக் கூற்றுப் படி நாம் நாளடைவில் சுத்தவெளியாக,  பிரம்மாக மாறி விடுகிறோம்.
4.   விஞ்ஞானிகள் மிகவும் நுணுக்கமான அணுவை ஆராய்கிறார்கள். அதே நேரத்தில் கோடான கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள பொருட்களைப் பற்றி எண்ணுகிறார்கள். அதிலேயே தொய்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள்
“பீட்டா” wave-ல் இருக்க முடியாது. “ஆல்பா” wave—க்கு பக்கத்தில் வருகிறார்கள். “விஞ்ஞானிகள் பரம்பொருளுக்கு மிகப் பக்கத்தில் இருக்கிறார்கள்.”  ஆக தியானத்தின் மூலம் உடல் ஆளவிலும், உள்ளத்தளவிலும் பல நன்மைகள் உண்டு என்பது தெளிவாக விளங்குகிறது.
                ----------------------------------------------------------------------அருள் தந்தை.


       வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்
----------------------------------------------------------------------(தொடரும்)

Wednesday, 5 October 2011

தவம்






தவம் என்னும் யோகமானது மனித வாழ்வுக்கு இன்றியமையாத வாழ்க்கை நெறி. இதன் மதிப்புணர்ந்த பெரியோர்கள் தங்கள் வாழ்நாளை அர்ப்பணம் செய்து மனித குலத்துக்கென உருவாக்கி போற்றிக் காத்துத் தேவையும், தகுதியும் உள்ளவர்க்கு உதவி செய்தனர். தற்காலத்தில் வாணிப நோக்கமுள்ள பலரால் யோகத்தின் கருத்தும், செயல் முறைகளும், விளைவுகளும் திரித்துக் கூறப்படுகின்றன, பரவலாகப் போதிக்கப்பட்டும் வருகின்றன.

மாயாஜாலங்களைப் புரிந்து, மக்களை மயக்கவல்ல அற்புத ஆற்றல்களை அளிக்கும் பயிற்சி முறையே யோகம் என்றும், தனிமனிதன் பெருமையையும், புகளையும் உயர்த்தும் ஒரு சாதனை தான் யோகம் என்றும் பொதுமக்கள் கருத்துக் கொள்ளுமாறு யோகத்திற்குப் பொருள் கூறப்படுகின்றது. பல இடங்களில் யோகமென்னும் தவத்திற்கு உண்மை வளக்கம் கூறி வருகிறேன். அறிவாளிகள், சிந்தனையாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். உண்மை உணர்ந்த தெளிவிலே மன நிறைவு பெறுகின்றனர்.

மனதை உயிர்மேல் வைத்து பழகும் தியானமோ, அசைவற்று, நினைவற்றிருக்கும் சாதனையோ, பல கோணங்களில் செய்யும் உடற்பயிற்சியோ, தற்சோதனையோ, மாத்திரம் தவம் அன்று. மனிதப் பிறவியின் பெரு நோக்கமும், மதிப்பும் உணர்ந்து அறிவின் நிலை அறிந்து பேரறிவு நிலை எய்தி, புலன்களை ஒழுங்கு படுத்தி ஒழுக்கம், கடமை, ஈகை என்னும் அறநெறிகளை தனதுயல்பாகக் கொண்டு, அயரா விழிப்பு நிலையோடு தானும் வாழ்ந்து, பிறரையும் இனிதாக வாழ வைக்கும் உயர் வாழ்வே தவம் ஆகும்.

இத்தகைய பண்பாட்டுக்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ளும் பயிற்சி முறைகளே தியானம்,  தற்சோதனை, உடற்பயிற்சி, அறநெறி விளக்கிக் கொள்ளும் போதனை, வேதாந்த விளக்கங்களை இவையாவுமாகும். இவை எல்லாம் வழிகளே. முடிவு, அறவை அறிந்த பேரறவாழ்வாகும்.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்
----------------------------------------------------------------------(தொடரும்)