Thursday, 6 October 2011

தியானத்தின் நன்மைகள்.





தியானத்தின் நன்மைகள்.

விஞ்ஞானிகள் தியானம் செய்யும் மனிதனுடன் விஞ்ஞானக்
கருவிகளை இணைத்து, ஆராய்ச்சி செய்து பின் பல கருத்துக்
களைக் கூறியிருக்கிறார்கள். உடலளவில் ஏற்படும் நன்மைகள்-:

1.    தியானம் செய்வதினால் மூச்சு வாங்கி வெளியிடும் வேகம் 
கு   றைகிறது. இருதயத் துடிப்புக் குறைகிறது. ஆயுள் அதிகரிக்கிறது.
2.    (Blood Pressure) இரத்த அழுத்த நோய் குணமாகிறது.
3.    எல்லா நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கின்றது.
4.    உடலின் உஷ்ணம் சிறிது அதிகரித்துப் பிறகு படிப்படியாகக் குறைகிறது.
5.    உடல் முழுவதற்கும் நன்கு ஓய்வு கிடைக்கிறது.
6.    ஏற்கனவே கெட்டுப்போன செல்களை நீக்கிப் புதிய செல்களை உருவாக்குகின்றன.

இனி உள்ளத்தளவில் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம்:

1.   மனம் குவிகிறது. இதனால் மன ஆற்றல் அதிகரிக்கின்றது.
2.   மூளையின் உள்ள பல புதிய நூற்றுக்கணக்கான செல்கள் தியானத்தினால் ஊக்குவிக்கப்பட்டு இயங்க ஆரம்பிக்கின்றன. இதனால் அறிவு கூர்மை பெறுகிறது. எதையும் இளிதில் புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது.
3.   “As a man thinketh, so he becomes it”, “A man is what he thinks all day long”’ என்பது இன்றைய மனோதத்துவ நிபுனர்களின் கருத்து. அந்தக் கூற்றுப் படி நாம் நாளடைவில் சுத்தவெளியாக,  பிரம்மாக மாறி விடுகிறோம்.
4.   விஞ்ஞானிகள் மிகவும் நுணுக்கமான அணுவை ஆராய்கிறார்கள். அதே நேரத்தில் கோடான கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள பொருட்களைப் பற்றி எண்ணுகிறார்கள். அதிலேயே தொய்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள்
“பீட்டா” wave-ல் இருக்க முடியாது. “ஆல்பா” wave—க்கு பக்கத்தில் வருகிறார்கள். “விஞ்ஞானிகள் பரம்பொருளுக்கு மிகப் பக்கத்தில் இருக்கிறார்கள்.”  ஆக தியானத்தின் மூலம் உடல் ஆளவிலும், உள்ளத்தளவிலும் பல நன்மைகள் உண்டு என்பது தெளிவாக விளங்குகிறது.
                ----------------------------------------------------------------------அருள் தந்தை.


       வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்
----------------------------------------------------------------------(தொடரும்)

No comments:

Post a Comment