Thursday, 15 March 2012

அன்பும்,கருணையும்.

அன்பும்,கருணையும்.

இயற்கையை ஆராய்ந்து பார்த்தால் அன்பும், கருணையும் தான் எங்கும் எதிலும் அமைந்திருக்கக் காணலாம். அன்பு என்பது எந்த ஒன்றையும் உடலாலோ, மனதாலோ தன்னோடு இணைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது. அப்படி இணைந்துள்ள மற்றொன்றுக்குத் தனது ஆற்றலைத் தொடர்ந்து அளித்து அதனை காத்து வருவது கருணை.

ஒரு முட்டையைப் பாருங்கள் அதிலுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றிணைந்து அதன் ஓடு பிடித்துக் கொண்டிருக்கிறது. இது போன்றது அன்பு. முட்டைக்குள்ளிருக்கும் மஞ்சட்கருதான் குஞ்சு ஆக உருவாக இருக்கிறது. அந்த மஞ்சட்கருவிற்கு அதனை சுற்றியுள்ள வெள்ளைக் கரு தேவையான எல்லாப் பொருட்களையும் அளித்து நலமளிக்கின்றது. இது போன்றது கருணை.

ஒரு மாமரத்தில் பிஞ்சு விடுகிறது. அதனைச் சிறு காம்பின் மூலம் விழுந்து விடாமல் மரமானது பிடித்துக் கொண்டிருக்கிறது. இது அன்பு. அவ்வாறு பிடித்துக் கொண்டே பிஞ்சு வளர்வதற்குத் தேவையான ரசாயன நீரை அந்த மரம் பாச்சிக் கொண்டே இருக்கிறது. அது தான் கருணை.

உயிரினங்களில் ஒரு குழந்தையைப் பெற்ற தாய் அதனை எப்போதும் தன்னோடு இணைத்துப் பிடித்துக் கொண்டோ அல்லது அது பிரிந்து போய் விடாமல் கண்காணித்துக் கொண்டோ இருக்கிறாள் இது அன்பு. அதே காலத்தில் அந்தக் குழந்தை வளர்வதற்கும், வாழ்வதற்கும் தேவையான பால்,உணவு இவைகளை அது வளர்ச்சி பெறும் வரையில் ஊட்டிக் கொண்டே இருக்கிளாள்.இது தான் கருணை.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Monday, 30 January 2012

மனித நேயம்

மனித நேயம்

இன்றைய வாழ்க்கை நிலையைக் கவனிக்கும் போது நாம் தெறிந்தோ, தெரியாமலோ சில கருத்துக்களை நம் மனதில் பதிய வைத்துக் கொள்கிறோம். நட்புறவை வளர்க்கும் சில கருத்துக்களை ஏற்று வருகிறோம் அதோடு சில வெறுப்பணரச்சியூட்டும் கருத்துக்களையும் நாம் பதிவு செய்து கொண்டு வருகிறோம்.

மொத்தத்தில் பார்த்தால் உலகில் நட்புணர்ச்சியைவிட வெறுப்புணர்ச்சி தான் அதிகமாகக் காணப்படுகிறது. கட்சிப்பற்று காரணமாக சாதிப்பற்று காரணமாக, நாட்டுப்பற்று, குடும்பப்பற்று காரணமாக, வெறுப்புணர்ச்சியே வளர்க்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். இந்த வெறுப்புணர்ச்சி பெரிதும் கருத்து வேறுபாடுகள் காரணமாகவே எழக்காண்கிறோம்.

ஒருவர் செய்கின்ற காரியமோ, பேசுகிற பேச்சோ நமக்குப் பிடிக்காத காரணத்தால் கோபம் எழும்போதே அது மூளையிலுள்ள சிற்றறைகளை தாக்கி வெறுப்பணர்ச்சியைப் பதிவு செய்து விடுகிறது. கணவன் - மனவி உறவில் இவ்வித வெறுப்பணர்வு ஏற்பட்டு விடுமானால் அந்தக் குடும்பத்தில் ஒரு போதும் அமைதி இருக்காது. ஒருவரை ஒருவர் சபித்துக் கொள்வதாகத்தான் இருக்கும். ஆனால், இதை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. இதனால் ஒருத்தருக்கொருத்தர் தமக்கே தம் குடும்பத்திற்கே தீமை விளைவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்வதில்லை.

மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும், மதித்து நடக்க வேண்டும். கூடுமானவரை ஒருவரை ஒருவர் எப்போதும் வாழ்க! வாழ்க! என்று வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.  அப்போது தான் நேசம் வளரும்,  வெறுப்பு நீங்கும், நன்மை ஏற்படும்.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Tuesday, 3 January 2012

வெற்றி பெற வழி.

வெற்றி பெற வழி.

தனக்கும், பிறருக்கும் தற்காலத்திலும், பிற்காலத்திலும் துன்பம் வராத செயல்கள் செய்ய வேண்டும். கூடுமான வரையில் பிறருக்கு உதவ வேண்டும்.  இதுதான் வேதங்கள், புராணங்கள் சொல்லும் சாரம். (Essence)
ஆகும்.

ஏதோ சந்தர்ப்ப வசத்தால் பிறருக்கு துன்பம் வந்து விடுகிறது. அவர்களால் தீர்த்துக் கொள்ள முடிவதில்லை. அப்போது இயன்ற வரையில் நாம் அப்படிப்பட்டவர்களின் துன்பத்தைத் தீர்கின்றபோதும், அதனால் நமக்குத் துன்பம் வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நமக்குத் துன்பம் வந்து, நாம் பிறரிடம் போய் அதைத் தீர்க்கும்படி கெஞ்சும் நிலை வந்து விடக்கூடாது. அல்லவா? அந்த நிலையில் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும். தனக்கும் துன்பமில்லாது, பிறருக்கும் துன்பம் விளைவிக்காத வாழ்க்கையில், நமக்கு என்னென்ன தேவையோ, அப்படிப்பட்ட சூழ்நிலை தானாகவே அமையும். இதற்காகக் கெஞ்சிக் கேட்டு ஒன்றும் நாம் பெற வேண்டியதே இல்லை.

எந்த இடத்திலே, எந்தக் காலத்திலே, எந்த நோக்கத்தோடு, எந்த செயலை நீ எவ்வளவு திறமையாகச் செய்கிறாயோ அதற்குத் தகுந்த வாறே உனக்கு விளைவும் வரும். வெற்றுயும் வரும்.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Saturday, 24 December 2011

வெற்றி பெற வழி.

வெற்றி பெற வழி.

தனக்கும், பிறருக்கும் தற்காலத்திலும், பிற்காலத்திலும் துன்பம் வராத செயல்கள் செய்ய வேண்டும். கூடுமான வரையில் பிறருக்கு உதவ வேண்டும்.  இதுதான் வேதங்கள், புராணங்கள் சொல்லும் சாரம். (Essence) ஆகும்.

ஏதோ சந்தர்ப்ப வசத்தால் பிறருக்கு துன்பம் வந்து விடுகிறது. அவர்களால் தீர்த்துக் கொள்ள முடிவதில்லை. அப்போது இயன்ற வரையில் நாம் அப்படிப்பட்டவர்களின் துன்பத்தைத் தீர்கின்றபோதும், அதனால் நமக்குத் துன்பம் வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நமக்குத் துன்பம் வந்து, நாம் பிறரிடம் போய் அதைத் தீர்க்கும்படி கெஞ்சும் நிலை வந்து விடக்கூடாது. அல்லவா? அந்த நிலையில் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும். தனக்கும் துன்பமில்லாது, பிறருக்கும் துன்பம் விளைவிக்காத வாழ்க்கையில், நமக்கு என்னென்ன தேவையோ, அப்படிப்பட்ட சூழ்நிலை தானாகவே அமையும். இதற்காகக் கெஞ்சிக் கேட்டு ஒன்றும் நாம் பெற வேண்டியதே இல்லை.

எந்த இடத்திலே, எந்தக் காலத்திலே, எந்த நோக்கத்தோடு, எந்த செயலை நீ எவ்வளவு திறமையாகச் செய்கிறாயோ அதற்குத் தகுந்த வாறே உனக்கு விளைவும் வரும். வெற்றுயும் வரும்.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Wednesday, 21 December 2011

வாழ்த்து.

பாஸ்கர்.

வாழ்த்து.

வாழ்த்து எல்லா மந்திரங்கட்கும் மேலான  திருமந்திரமாகும். ஒருவரை நாம் வாழ்த்தும் போது அந்த உயிருக்கும் நம் உயிருக்கும் ஒரு உயிர்த் தொடர்பு – சங்கிலித் தொடர்பு ஏற்பட்டு வாழ்த்து அதன்மூலம் பயந்து வேலை செய்யும். ஒருவரை நாம் வாழ்த்தும் தகுதியைப் பெறுகிறோம். அந்த அளவுக்கு நமது பெருந்தன்மை தானே வளர்ச்சியடைகிறது. இந்த வாழ்த்து பேரறிவில் பதிவாகி, அதன் மூலம் அடிமனதிற்கும் பரவி, நாளாக நாளாக நட்புணர்ச்சி வளர உதவும், வெறுபுபணர்ச்சி தானே மறைந்து விடும்.

ஒற்றுமையின்றி பிணங்கி நிற்கும் ஒரு மகனைத் தந்தை தினசரி வாழ்த்திக் கொண்டே இருப்பாரானால் இருவருக்குமிடையேயுள்ள உயிர் தொடர் மூலம் அவ்வாழ்த்துப் பரவி மகனுடைய மூளையில் பதிந்து அவனைச் சிறுகச் சிறுகத் திருத்தி, தகப்பன் விருப்பப்படி நடக்கும் படி செய்து விடும். கணவன் மனைவியிடையேயும் இப்படித்தான். இது நான் அனபவமாகப் பல குடும்பங்களில் கண்ட உண்மையாகும்.

வாழ்த்தின் மூலம் தேவையான எல்லா நன்மைகளும் கிட்டும். ஆதலால் தான், கடவுளைக் கூட வாழ்த்தும் பக்தர்களையும் பக்திப் பாடல்களையும் நாம் பார்க்கிறோம். கடவுளை வாழ்த்துவதன் மூலம் எல்லோரையும் வாழ்த்தும் நற்பழக்கத்தை மனிதன் ஏற்படுத்திக் கொண்டான். இதனால் மனவளம் பெருகுவது நிச்சையம்.

"அருட்பேராற்றல் கருணையினால்
உடல் நலம், நீளாயுள், நிறைச்செல்வம்,
உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க
வளமுடன்’ என்று வாழ்த்திப் பயன்பெறுவோம்."

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Tuesday, 13 December 2011

வாழ்வாங்கு வாழ வழி.

வாழ்வாங்கு வாழ வழி.

நாம் வாழும் காலத்தில் உடலையும் மனத்தையும் சரிப்படுத்திக் கொண்டால், நமக்குப் பின்னாலே பிறக்கக் கூடிய குழந்தைகள் எப்படியிருக்கும் என்று பார்த்தீர்களானால் அவை ஆரோக்கியமான கட்டமைப்புக் கொண்டதாகத் திகழும்

அவ்வாறு நல்ல குழந்தைகளை உலகுக்குத் தருவதற்கு நமது உடற்பயிற்சி, தியான முறை இரண்டு வாய்ப்பு அளிக்கும். வேலைப்பழு அதிகமாகும் போது, ஊதியம் தராத உடற்பயிற்சி, தியானம் இவற்றை முதலில் நிறுத்தி விடலாம் என்று எண்ணாது, உள்ளூர இயங்கி வரும் இறைச் சக்திக்குத் தொண்டு செய்யும் வகையிலே உடற்பயிற்சி,  உளப்பயிற்சி செய்து நாளுக்குநாள் மகிழ்ச்சியும் இனிமையும் பெற்று வாழ வேண்டும்.

தினந்தோரும் நாம் காலையிலிருந்து மாலைவரை குடும்பத்தில் பலவகைப் பொருட்களையும், பண்டங்களையும் கையாளுகின்றோம்.  சமையல் பாத்திரங்களையே எடுத்துக் கொள்ளுங்களேன். சுத்துப்படுத்தி வைத்தால் தானே அவை மறுநாளைக்கு உதவும்? அதே போல தினந்தோரும் மனதையும், உடலையும் உபயோகிக்கிறோம், அவற்றில் அவ்வப்போது ஏற்படக்கூடிய களங்கங்களைப் போக்கி, மீண்டும் புதிதாக நாளைய உபயோகத்திற்குத் தயராக வைத்துக் கொண்டால் தானே நன்றாக இருக்கும்?

உடலுக்குக் கொடுக்கக்கூடிய உடற்பயிற்சி, மனதிற்குக் கொடுக்கக்கூடிய தியானம்ப் பயிற்சி உயிர்க்குறுதி அளிக்கும் காயகல்பப்பயிற்சி இம்மூன்றும் உடலையும், உள்ளத்தையும், உயிரையும் மேன்மைப்படுத்தி, தூய்மைப்படுத்தி மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி வகுப்பனவாகும்.,

----------------------------------------------------------------------அருள் தந்தை
வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)