குடும்ப
நல வாழ்த்து.
ஒவ்வொரு
நாளும் காலையில் இருந்து மாலை வரையில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை இருபத்தைந்து
தடவை வாழ்த்தினால் ஒரு மாதத்திலேயே குடும்பத்தில் நல்லபடியான சூழ்நிலை உருவாவதைக்
காணலாம்.
வாழ்த்தும்
போது தெய்வீக நிலையில், அமைதி நிலையில் இருந்து கொண்டு வாழ்த்த வேண்டும். இந்த
முறையில் வாழ்த்தின் மூலம் உலகத்தையே மாற்றி அமைத்து விடலாம். நமக்குத் தீமை
செய்தவரையும் ஏன் வாழ்த்த வேண்டுமென்றால், ‘அவர் அறியாமையினாலே தான் அவ்வாறு
செய்தார், நம்முடைய கர்மச் சுமையின் விளைவு அவரைத் தீமை செய்ய இயக்கியது. எனவே
அவர் செய்தார். அவருக்கு உள்ளாக இயங்கிக்
கொண்டிருபதும் எல்லாம் வல்ல முழுமுதற் பொருளே.
எனவே,
அவரை மனதார வாழ்த்தி எனது தீய பதிவு ஒன்றை அகற்ற உதவிய அவருக்கு நன்றியும்
செலுத்துவேன்’ என்ற தத்துவ விளக்கம் நம்
செயலுக்கு வந்து இயல்பாகி விட்டதென்றால், நாம் ஆன்மீகப் பாதையில் திடமாக
முன்னேறிச் செல்கிறோம் என்பதற்கு அதுவே அறிகுறியாகும்.
------------------------------------------------------------------அருள் தந்தை.
வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்
----------------------------------------------------------------------(தொடரும்)
No comments:
Post a Comment