தெய்வீக உறவு.
குழந்தைபேறு உண்டாவதற்கு முன்னதாகவே கணவன் மனைவி உறவு எப்படி இருக்கவேண்டும் என்பதை நமது பண்பாட்டில் நாம் வளர்க்க வேண்டும். ஒவ்வொருக்கொருவர் பிணக்கு(Conflict Thoughts) எழாது உள்ள குடும்பத்தில் தான் குழந்தைகள் நன்றாக இருக்கும். அங்கு பிணக்கு இருக்குமேயானால் அடிப்படை சுதந்தரத்தையே அடக்கு முறையால் தடுக்கும் போக்கு, அதில் உள்ள போராட்டம் குழந்தைகளிடம் பாதிக்கும், மனம், உடல் நலம் கெட்டதாகத்தான் அமையும். இதை மிகவும் முக்கியமாகக் கண்காணிக்கின்ற போது, கணவனும் ஒத்துழைக்க வேண்டும்., மனைவியும் ஒத்துழைக்க வேண்டும்.. ஒருவருக்கொருவர் உள்ளத்தைப் புரிந்து கொண்டு, ஒருவருக்கொருவர் உதவி வாழ்வதற்காக வந்தாகி விட்டது. திருமணமும் ஆகிவிட்டது, இனி வாழ்ந்து தான் ஆகவேண்டும். ஒருவருக்கொருவர் உதவித்தான் ஆக வேண்டும் என்ற அளவிலே வந்து விட வேண்டும்.
அங்கு விட்டுக் கொடுப்தற்குப் பதிலாக ஒவ்வொருவரும் ஒரு விதமான பிடியைப் பிடித்துக் கொண்டு, என் கருத்துத் தான் உயர்ந்தது என்று வைத்துக் கொண்டால், பிணக்குத்தான் வரும். இதையெல்லாம் சரி செய்வதற்கு அகத்தவம் என்ற முறையிலே ஒரு தியான முறையை நல்ல முறையில் செய்து வந்தார்கள் என்றால் மயக்க நிலையிலிருந்து விழிப்பு நிலைக்கு வந்து சரி செய்து கொள்ளலாம்..
------------------------------------------------------------------------------அருள் தந்தை
வாழ்க வையகம்---------------------------------------------------வாழ்க வளமுடன்
--------------------------------------------------------------------------------------------(தொடரும்)
No comments:
Post a Comment