“எல்லாம்வல்ல பரம்பொருள் (Providence) எனக்கு வேண்டியதை எல்லாம் உரிய காலத்தில் கிடைக்குமாறு வைத்திருக்கும் பொழுது அந்தப்பரம்பொருள் இந்த இயற்கையாக,, பிரபஞ்சமாக, உலகமாக, மக்களாக, எனக்கு உரியவர்களாக,, என்னுடைய அறிவாக இருந்து கொண்டு எல்லாவற்றையும் அளித்துக் கொண்டே இருக்கிறபோது நான் எதற்காக இது இல்லை, அது இல்லை என்று குறைபட்டுக் கொள்ள வேண்டும், பிச்சை எடுக்க வேண்டும்? செய்ய வேண்டியதை மனம் கோணாமல் செய்து விட்டு கவலைப் படாமல், பிறரை நொந்து கொள்ளாமல் இரு. உனக்கு முரண்பட்டவர்கள் யாரேனும் இருப்பின் அவர்களை வாழ்த்திக் கொண்டே இரு. உன்னை வாழ்த்திக் கொள், உன் குடும்பத்தை வாழ்த்து. சுற்றத்தாரை வாழ்த்து, சமுதாயத்தை வாழ்த்து.
மன அமைதியைப்பேணும் வகையில் தியானம், சிந்தனை, அகத்தாய்வு இவற்றில் தொடர்ந்து ஈடுபடு. உடற்பயிற்சியை நன்கு செய்து வா. இவ்வாறு தொடர்ந்து ஒட்டுமொத்தமான வாழ்க்கைப் பயிற்சியை கைக் கொண்டால் வேறு எந்த ஞானமும் வேண்டாம். இன்னும் ஒரு கடவுளும் வேண்டாம்.
ஏனென்றால், எந்த செயல் செய்தாலும் அங்கே விளைவு கடவுள் செயல்தான்.(That is the cause and effect system) அது இயற்கையினுடைய விளைவுதான். நீ செய்யும் செயலுக்குத் தக்கவாறு, பொருளுக்குத் தக்கவாறு உனக்கு இன்பமோ, துன்பமோ, வெகுமதியாகவும், தண்டனையாகவும் கொடுத்துக் கொண்டே இருப்பது எதுவோ அது தான் எல்லாம் வல்ல இறை. ஆகவே, அந்த இறைவனை உன்னுடைய செயலின் விளைவாகக் காலையிலிருந்த மாலை வரையில் பார்த்து மதிப்புக் கொடுத்து வா. அதுவே கடவுள் வணக்கம். அதைவிட்டுத் தனியாக ஒரு கடவுளைத் தேட வேண்டாம்..”
-----------------------------------------------------------------------------------------------------அருள்தந்தை.
வாழ்கவையகம்---------------------------------------------------------வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment