சிக்கனம், சிந்தனை, சீர்திருத்தம்.
சிக்கனம் என்பதை முதலில் வைத்திருக்குறேன். சிந்தனையை அதற்கு அடுத்து வைத்திருக்கிறேன். ஆகவே, இந்த முறையிலே அந்தச் சிக்கனம், சிந்தனை, சிறந்த பண்பு, சீர்திருத்தமுடன் வாழ்வு, துணிவு இவை வேண்டும். அப்படி வேண்டுமானால் குடும்பத்தில் ஒருவர் மட்டும் சிக்கனம், சிந்தனை, சீர்திருத்தம் என்று இருந்தால் போதுமா? போதாது. இதை உணர்ந்து ஒத்துக் கொள்ளக் கூடிய இருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்பொழுது தான் குடும்பத்திலே அமைதி இருக்கும், சீர்திருத்தம் பரவ முடியும், சிக்கனம் நிலைக்க முடியும்,நலம் பெற முடியும்.எனவே, அந்த முறையில் சிக்கனம், சிந்தனை, சீர்திருத்தம் இவை எல்லாம் குடும்பத்தில் நிலவ வேண்டுமானால், அந்த சிந்தனையாற்றல் பெருகுவதற்கு மனவளம் தான் வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------அருள் தந்தை.
----------------------------------------------
வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்
----------------------------------------------------------------------(தொடரும்)
No comments:
Post a Comment