Friday 1 March 2013

உலக சமுதாய சேவா சங்கம்.


 
 
உலக சமுதாய சேவா சங்கம்.
 
நல்வாழ்வுக்கு வழிகாண வேண்டுமெனில், வாழ்வின் நலக்கேட்டுக்குக் காரணங்களை முதலில் அறிய வேண்டும். பழக்கத்தால் செயலும், கருத்தும் உருவாகி அவற்றுக்கு அடிமையாக வாழும் மக்களுக்கு விழிப் பூட்டி நல்வழிக்குத் திருப்புவது ஒரு சில நாளில், ஒரு சில மனிதரால் முடிக்கக்கூடிய செயலன்று.  ஒரு மனிதன் மக்கள் வாழ்வின் நோய்களுக்கு மருந்து கண்டு பிடிக்கலாம். அது சரியானது தானா என்று நேர்மையில் சிந்தித்து முடிவெடுக்க, விளக்க அறிவு பெற்றவர்கள் உலகில் பெருக வேண்டும்.
 
பல துறைகளிலும் பல நாட்டிலும் வாழும் மக்களுடைய அறிவு மயக்க நிலையிலிருந்து விடுபட்டு விளக்க நிலை பெறத்தக்க சூழ்நிலையும், வாய்ப்பும் பெருக வேண்டும். செல்வந்தர்கள், அரசியல் தலைவர்கள், வணிகர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் இவர்கள் பலரிடம் இன்று உலக நல நோக்கம் மிகுந்து வருகின்றது.
 
அவர்களுடைய ஒத்துழைப்பால் ஓருலகப் பண்பாட்டு அரங்கு நிறுவி அதன் மூலம் திட்டமித்த முறையில் மக்கள் பண்பாட்டை உயர்த்த வேண்டும். விஞ்ஞான அறிவு பெருகியுள்ள இக்காலத்தில் இளைஞர்களுடைய உள்ளத்தைத் தொட்டு, ஊக்கி நலம் பெருக்கும் நிறுவனம் செயல் புரிய வேண்டும். ஆம், இதனை யார் தொடங்குவது? எப்படி மக்களை மயக்க நிலையிலிருந்து விள்ள நிலை வாழ்வுக்கு மாற்றுவது?  மக்கள் நலம் பேசிப் பேசி மாண்டவர்கள் எண்ணிக்கை கொஞ்சமன்று.
 
சீரிய திட்டங்களும், அவற்றால் விளைந்த பயன்களும் எடுத்துக் காட்ட முடியவில்லையே! மீண்டும் இச்சோர்வு மனப்பான்மையில் வினாக்கள் எழுகின்றன. ‘உலக சமுதாய சேவா சங்கம்’ என்னும் நிறுவனமே தக்க பதிலாக இயங்குகின்றது.
 -------------------------------------------------------------------------------------------------அருள் தந்தை.
வாழ்க வையகம் --------------------------------------------------------------வாழ்க வளமுடன்.
தொடரும்