Thursday, 27 October 2011

அடிப்படைத் தேவைகள்
அடிப்படைத் தேவைகள்

உடலையும் அதன் இயக்கத்தையும் காக்க ஆகாரம், இரத்த ஓட்டத்தையும், ஜீரணத்தையும் சரியானபடி வைத்திருக்க மிதமான இழைப்பு.

உள்ளம் அமைதியாகவும், உச்சாகமாகவும் இருக்க கடல், நதிகள், மலைகாடுகள் முதலான இயற்கைக்காட்சி. இவைகளைப் பார்க்க உலகத்தைச் சுற்றிவரும் வாய்ப்பு.

புலன்களையும், அறிவையும் ஒன்று படுத்தித் தனக்கும் பிறருக்கும் இன்பத்தை ஊட்டும் நடனம், பாட்டு, சிற்பம், ஓவியம் முதலிய கலைகள்.

அறிவைப் பயன்படுத்த வயதுக்கேற்ற தியான, தவமுறைகள், இவையனைத்தும் மனிதனுக்கு – மனிதர் வாழ்வுக்கு அவசியமாகும்.

மற்ற தேவையற்ற பொருட்களையும், செயல்களையும் விட்டு ஒழிக்க வேண்டும். தேவையற்ற பொருட்கள் எவை என்று அறிந்து அவைகளின் உற்பத்தியையே நிறுத்துவிட வேண்டும். இவ்விதம் வாழ்ந்தால் உலகில் துன்பம் செயற்கையால் தோன்றாமலும், பெருகாமலும் இருக்கும்.

மனித இனம் சுகமாக வாழ்வதற்குத் தேவையான அனுபோகங்களை மட்டும் அளவுடன் கொண்டு, தேவையற்றவைகளை விட்டு விட வேண்டும்.
----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Monday, 24 October 2011

அளவுமுறை.
அளவுமுறை.

உணவு சுவையாக உள்ளது என்று மேலே மேலை சாப்பிட்டுக் கொண்டே போனால் இன்றைக்கு வயிற்று வலி, நாளைக்கு வயிற்றுப் போக்கு என்றாகும். டாக்டரிடம் போனால் நோயிக்கு மருந்து கொடுப்பார். குணமான மறுகணமே மீண்டும் அளவுக்கு அதிகமாக உணவு நாடிப் போனால், வாழ்நாள் முழுதும் வயிற்றுப் போக்கு என்ற நிலை ஏற்பட்டால் வாழ்க்கை என்ன ஆகும்? வேறு எந்தக் காரியத்தை நீங்கள் கவனிக்க முடியும்? சாப்பிடுவதை ஒரு உதாரணத்திற்காச் சொன்னேன்.
அதே போல் எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அளவுக்கு அதிகமாக ஈடுபட்டால், உடல் வலுவிழந்து போகிறது, உடல் கெட்டால், மனம் கெட்டால், வாழ்வு சீரழிகுறது. நாம் கெடுக்கிறோம். குடும்பம் பாதிக்கப்படுகிறது, சமுதாயம் தப்புவதில்லை.

ஐயுணர்வோடு மெய்யுணர்வு  இணைந்து வரும்போது உங்களுக்கு என்ன திடம் வருகிறதென்றால், உறவிலேயே ஒரு தெளிவு,  அதாவது detachment in attachment வருகிறது. இதுதான் உறவிலேயே துறவு நிலை. இது அல்லாத துறவு நிலை என்று தனியாக ஒன்று இருக்கவே முடியாது. அப்படியே எல்லாவற்றையும் விட்டு விட்டு போவது தான் துறவு என்றால் இறப்பவர்கள் தான் துறவு நிலைக்குப் போகிறார்கள் என்று சொல்லலாம்.

நாம் வாழும் போதே வாழ்வு நலமாக, அமைதியாக, மகிழ்ச்சியாக அமையவேண்டுமே தவிர, நாம் இறந்த பிறகு துறவானால் என்ன, எதுவானாலும் என்ன? அவ்வாறு வாழும்போது வாழ்வு திருப்தியாக,  மென்மையாக இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு அனுபோகத்திலேயும் எல்லை கட்டிக் கொள்ள வேண்டும், அளவு இட்டுக் கொள்ள வேண்டும்.
----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Friday, 21 October 2011

வருமுன் காப்போம்
வருமுன் காப்போம்.

உடலில் ஏற்கனவே இருக்கக்கூடிய நோய்களைப் போக்கிக் கொள்வது என்பது ஒரு முறை.  அதை சிகிச்சை (cure) என்று சொல்வார்கள். நோயைத் தீர்த்துக் கொள்வதற்கும் மேலான சிறந்த ஒரு முறை என்னவென்றால், நோய் வராமலே தடுத்துக் கொள்வது என்பதாகும்.  அவ்வாறு தடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு விழிப்பு அதற்குறிய செயல், ஒழுங்கு முறைகள் இவற்றைக் கைக்கொண்டால் நோய் வந்த பிறகு தீர்த்துக் கொள்வதை விடத் தடுத்துக் கொள்வது சுலபமானது எனத் தெரியவரும்.

மருத்துவத் துறை விஞ்ஞானிகள் முயற்சி கூடப் பெரும்பாலும் வந்த நோயைத் தீர்த்துக் கொள்வது என்பதோடு நிற்கிறது. அதுவே என்ன ஆகும் என்று பார்போமானால், ஒரு நோய் குறிப்பிட்ட இடத்தில் வந்ததென்றால் அந்த நோய் அந்த இடத்தை மட்டும் சேர்ந்ததாக இராது. வேறு ஏதோ ஒரு இடத்திலே, உறுப்பிலே அது ஆரம்பித்திருக்கலாம். உதாரணமாக, அஜீரணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனாலே தலைவலி இருக்கும்.  அந்தத் தலைவலிக்குத் தைலம் போட்டு விட்டால் அஜீ ரணம் போகுமா? போகாது. அதுபோல  நோய் ஒரு இடத்தில் இருக்கும், அதனுடைய அறிகுறி அல்லது வெளித் தோற்றம்  (symptom) வேறு இடத்தில் இருக்கும். சிகிச்சை முறையிலே என்ன செய்கிறோம் என்றால்,  ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட உறுப்பின் இயக்கத்தை ஒட்டி அந்த நோயைப் போக்க முயற்சி செய்கிறோம்.  மருந்தின் மூலமாக  அந்த இடத்தில் உள்ள ரத்த ஓட்டம், அந்த வால்வு இயக்கங்கள் ஊக்கிவிடப் படுகின்றன. ஆனால், உடல் முழுவதும் அந்தப் பாகம் நீங்கலாக மற்ற பாகங்கள் நன்றாக இருக்கின்றனவோ இல்லையோ அவையும் அந்த மருந்தாலே ஊக்கப்படுத்தப் பெறுகின்றன. சரியாக, திட்டமாக, அளவோடு, நன்றாக ஓடக்கூடிய குதிரைக்கு ஒரு சவுக்கடி கொடுத்தால் என்ன ஆகும்.  அந்த மாதிரி அந்த பாகங்களிலுள்ள இயக்கம் Accelerate ஆகும். Aggravate ஆகும். விளைவு தலைவலி போய் திருகு வலி வந்த கதையாகலாம். அந்த ஒரு இடத்தில் ஏற்பட்ட நோய் போகும், மற்ற இடத்தில் நோய் வரும். எனவே தான் சொன்னேன் – சிகிச்சை (cure) என்பதை விட நோய் வராமல் காப்பதுதான் நல்லது என்று.
----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Thursday, 20 October 2011

குடும்பம் அமைதி பெற
குடும்பம் அமைதி பெற.

இணக்கத்தை வற்புறுத்தும் போது, பிணக்கத்தை தீர்க்கும் போதும் இன்சொல்லையே உள்ளமும்,உதடும் உபயோகப்படுத்த வேண்டும். இன் சொல்லினால் கெடுதல் ஒழிய நன்மைகள் பல பெறலாம்.

குடும்ப அமைதியைப் பெற, சலனமில்லாததும், விசாலமானதுமான மனம் வேண்டும். எதையும் தாங்கும் இதயம் என்பார்களே அது இங்கே தான் வேண்ட்டும்.. பொறுமை, சகிப்புத்தன்மை இவை எல்லையின்றித் தேவையாகும். எவ்வளவு குழப்பமானாலும் பொறுமை ஒன்றினாலேயே வெற்றி கண்டு விடலாம்.

பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமையும், பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும். அதேபோல் பிறர் கூறும் கடுஞ்சொற்களையும் அவை சொல்லப்படாதது போல் பாவித்து ஒதிக்கிவிட வேண்டும். அப்போதுதான் அமைதி பிழைக்கும்.

தற்போது அம்மா – மகளுக்கிடையே கூடப் பிணக்குகள் தோன்றவதையும், வளர்வதையும் பார்க்கிறோம். அவர்களுக்கிடையே கூட, விட்டுக் கொடுத்தல் (Adjustment) இல்லையானால் வேறு யாரிடம் அதைத் தேடுவது? அம்மாவுக்குப் பெண்ணாக இருக்கும் போதே இப்படி என்றால், பின்னால் வாழ்க்கை எப்படி அமையும்? அப்புரம் யார் மேல் குற்றம் சொல்வது?

தன் கருத்துச் சரியேயாயினும், உயர்வேயாயினும், வாழ்க்கைத் துணை ஒத்துக்கொள்ளவில்லையென்றால் அது எவ்வளவு அவசியமான கருத்தானாலும் – ஞானமேயானாலும் – சிறிது காலத்திற்கு – அவர்கள் ஒத்துக்கொள்ளும் வரை – தள்ளி வைக்க வேண்டியதுதான். குடும்ப அமைதியை இழந்து பெறுவது – ஞானமேயாயினும் – அதனால் ஒரு பயனும் வராது.
----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Tuesday, 18 October 2011

குடும்பக் கலை


குடும்பக் கலை.


யோகமுறையிலே “எளிய முறைக் குண்டலனி யோகம்” என்று ஒன்று முக்கியமானது.  அதன் பிறகு உடற்பயிற்சி, அதற்கு மேலாக  அகத்தாய்வு. அகத்தாயெவிலே எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல் சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல், நான் யார் என்ற வினா எழுப்பி விடை காணுதல் என்ற அளவிலே வருகிற போது இந்த உடல்லெல்லாம்  தெளிந்த போது மனமும் தூயதாகத் தெளிவாக இருக்கிறது.

இருட்டிலே இருக்கின்ற போது அங்கு நல்ல வெளிச்சம் வந்தால்  எப்படியிருக்கும்? மேல் தளத்திலிருந்து படியிலே இறங்குகின்றோம் என்று  வைத்துக் கொள்ளுங்கள். விளக்கு இல்லை, சில சமையம் படி இருப்பதே தெரியவில்லை என்றால் என்னவாகும்?  ஆனால், படியிருக்கிறது என்று தெரிந்து விளக்கும் இருந்தால் எப்படியிருக்கும்? அதே போல் வாழ்க்கையிலே தெரிந்து கொள்வதற்கும், தெரிந்ததை நடத்தி, திருத்தி நாம் உறுதி எடுத்துக் கொண்டு அந்த முறையிலே வாழ்வதற்கும் ஏற்றதோர் பயிற்சி தான் மனவளக்கலை.

அதற்கு மேலாக உடலை நன்கு உறுதியாக வைத்துக் கொண்டு ஆன்மாவை வளதர்த்துக் கொள்வதற்குப் பெருந்துணை புரியும் கலைதான் காயகல்பக் கலை. அதை ஒழுங்காகச் செய்து வந்தால் மனிதன் எந்த நிலைக்கு உயர வேண்டுமோ அந்நிலைக்கு உயரலாம்.


----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Saturday, 15 October 2011

நல்வரம்
நல்வரம்

 நாம் வெற்றியாக, அமைதியாக வாழ வேண்டும். அதற்கு என்னென்ன வேண்டும் என்கின்ற போது “உடல்நலம், நிறை செல்வம், உயர்புகள், மெஞ்ஞானம் ஓங்கி வாழ்வோம்”.. இதைவிட உங்களுக்கு என்ன வேண்டும்? ஒரு அன்பர் ஒருமுறை ஒரு கேள்வி எழுப்பினார். நாம் தெய்வத்தன்மையில் இருந்து  தவம் செய்த பிறகு நமக்காக இவையெல்லாம் கேட்க வேண்டுமா என்று, நான் விளக்கினேன். பொதுவாக எல்லோருக்கும் அது தேவை என்று சொல்கிறேன்.

நீங்களே எண்ணிப்பாருங்கள். உடல் நலம வேண்டுமா, வேண்டாமா? பிறகு நீளாயுள். நாம் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும், அறிவை அறிவதற்காகப் பிறந்து இருக்கிறோம். அதற்காக அந்த வழாயில் இருக்கின்றோம். அது நிறைவேற வேண்டும்.  அதற்கு இடையில் துண்டு போட்ட மாதிரி இந்த உயிரை விட்டு விட்டால் வேலை முடியாது. ஆகவே, நீளாயுள் வேண்டும். அடுத்தது நிறை செல்வம். இந்த உலகத்தில் வாழும் வரை வசதிகள் வேண்டுமல்லவா? எல்லாம் நல்ல படியாக எண்ணுவதுதான் நிறைசெல்வம். உயர்புகழ் என்றால் என்ன? நம்முடைய செயல் எல்லோருக்கும் நல்லபடியாக அமைவது, அமையும் போது அதனால் பயன் பெற்ற மக்களுடைய பாராட்டுத்தான் புகழ்.

ஆகவே, புகழ் என்பது ஏதோ நமக்குத் தனிப்பட்ட சொத்து அன்று. நான் செய்யக் கூறிய காரியங்கள் எல்லாம் எல்லோருக்கும் நன்மை அளிக்கட்டும் எனபதுதான் புகழில் இருக்கக் கூடியது. கடைசியாக மெஞ்ஞானம். நாம் எந்ந நோக்கத்தோடு பிறந்தோமோ, அந்த நோக்கத்தை அடைவதற்கு மெய்ப்பொருள் விளக்கம் வேண்டும். இந்த ஐந்தையும் தான் “உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெஞ்ஞானம் ஓங்கி வாழ்க” என்று சொல்கிறேன்.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)