Friday, 25 November 2011

நினைப்பது நடக்கும்.

இராசசேகரன் (எஸ்.பி.)நினைப்பது நடக்கும்.

விழிப்பு நிலையிலேயே இருக்கப் பழகிக் கொண்டோமானால், மற்றவர்களுடைய எண்ண அலைகள் தீமை விளைவிப்பவனாக  இருந்தாலும், உணர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பவையாக இருந்தாலும், அவை நம்மைப் பாதிக்கா, உதாரணமாக, நான்கு வானொலி நிலையங்கள் நான்கு விதமான வேறுபட்ட நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் ஒலிபரப்புகின்றன. நம் ரேடியோவை எந்த அலை நீளத்தில் வைக்கிறோமோ அது மாத்திரம் தான் இங்கை கிடைக்கும். மற்றவை எல்லாம் வந்து மோதும், ஆனால் கேட்காது.

அதுபோலவே தேவையற்ற அலைக்கழிப்பும் பாதிப்பும் இல்லாமல் விட்டுவிலகி எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த நிலைக்கு ஏற்ப நமக்கு என்ன தேவையோ அது கிடைக்கும். நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை நினைப்போம். நாம் என்ன நினைக்கிறோமோ அதைச் செய்ய முடியும் என்ற அளவிலே மனித த்திறமை வெளிப்படுகிறது. இந்த மனித த்திறமை அதிகரிக்க அதிகரிக்க என்ன ஆகும்? நாம் எங்கு போனாலும், நமக்காக மற்றவர் தாமாகவே அந்த அலையிலே கட்டுப்பட்டு, நம் மதிப்பை உணர்ந்து புரிந்து கொள்ள அவர்களுக்கு எண்ணம் தோன்றும். எங்கே போனாலும் நமக்கு வெற்றியாகவே இருக்கும்.

அப்படி எங்கேயாவது வெற்றி இல்லாமல் தடை ஏற்பட்டாலும் அந்த த்தடையினால் நமக்குக் கெடுதல் இல்லை. "நம்மைத் திருப்பி விடுவதற்காக இந்த அலை நீளத்தில் தேவையில்லாதவற்றைத் தள்ளி விடுகிறது. அதனால் அந்த வேலை நடக்கவில்லை" என்று எண்ணி அமைதி அடைந்தால், எந்தக் காலத்தில் எந்த சூழ்நிலையில் அந்த  வேலை நடக்க வேண்டுமோ அது தானாகவே நடந்து விடும்.

முற்றறிவு (Total Consciousness) என்று சொல்லக்கூடிய பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கக் கூடிய இதே அறிவு தான் எங்கேயும் இருக்கிறது. அது தொகுப்பறிவு.(Collective Knowledge) அதனால், அந்த இடத்திலுரிந்து நாம் எண்ணிய எண்ணத்திற்குரிய காலமும், வேகமும்  வரும்போது அது தானாகவே மலர்ந்து செயலாகிறது.
----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Wednesday, 23 November 2011

மனநிறைவு.ரகுபதி (எஸ்.பி.)
 
மனநிறைவு.

பேரியக்க மண்டலம் கணக்கிட இயலாத பருமன் உடையது. அதில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், (சூரியன்கள்) கோள்கள் அதனதன் விரைவிலே, பாதையிலே சற்றும் பிறழாமல் உலவிக்கொண்டிருக்கின்றன. மனிதர் வாழும் இப்பூவுலகம் மிகப் பெரியது.  கணக்கிட முடியாத காலத்தையுடையது. மனித இனம், மற்ற உயிரினங்கள் எண்ணிலடங்கா.

இவையெல்லாம் இறையென்ற பூரண ஆற்றலின் அழுத்தமென்ற விரைவாலும் ஒழுங்காற்றல் என்ற பிறழா நெறியாலும் பிசகாமல் சத்தியம் தவறாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இப்பேராற்றலின் கருணையினால் ஒவ்வொரு சீவனும் பிறக்கும் போதே அதன் வாழும் காலம் வரைக்கும் தேவையான அனைத்தும் இருப்பாகவும் இணைக்கப்பட்டும் உள்ளன. இவற்றையெல்லாம் நமது மனதை விரித்து எண்ணிப் பார்ப்போம்.

இறைநிலை, பேரியக்க மண்டலம், உயிரினங்கள், இன்ப துன்ப விறைவுகள், எண்ணம், செயல்கள், விருப்பம், நிறைவு என்ற எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்ந்து இணைந்த ஏற்பாடாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நமக்கென்ன குறை? என்னென்ன குறை? உண்மையில்  குறையே இயற்கையில்  எள்ளளவும் இல்லை.

பின் ஏன் மனக்குறை? உடல் நலக்குறை?

மனித உள்ளத்தில் தேவையுணர்வு, விருப்பம் என்று இரண்டு எண்ண எழிச்சிகள் உள்ளன. தேவை இயற்கையானது. உடலையும், உயிர் வளர்ச்சியையும் ஒட்டி எழுவது. விருப்பம் தேவையிலிருந்தும் எழலாம். கற்பனையாகவும் பழக்கத்திலிருந்தும் எழலாம். தேவையை ஒட்டியதாகவே விருப்பத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டால் நீயே ஞானி. கற்பனையாகவும் பழக்கத்தை ஒட்டியும் எழும் விருப்பங்களை அப்படியே செயல் படுத்த எண்ணத்தை, உடலை இயங்க விடும்போது உனக்கு அமைந்த ஞானத்தைப் பயன்படுத்தாத வீண்ணாகிறாய்.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Friday, 18 November 2011

குடும்ப அமைதியே ஞானத்திற்கு வழி.குடும்ப அமைதியே ஞானத்திற்கு வழி.

நாம் ஆன்மீக வாழ்வு நடத்த முயல்கிறோம். மற்றவர்கள் அவரவர் வழியில் நடப்பார்கள். நம் குடும்பத்திலேயே கூட அத்தகையவர்கள் இருப்பார்கள். மற்றவர்களின் வழியில் நம் ஆன்மீக வாழ்வு பாதிக்கப்படக்கூடாது. அவ்விதமாக – எல்லோருக்கும் ஒத்ததாக நம் வாழ்வு முறையை அமைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் நம் வாழ்வு ஆன்மீக வாழ்வாக இருக்க வேண்டும்.

மனவளக்கலையை நான் வகுத்த போது, குடும்பத்திலிருந்து அமைதி தொடங்கி, சமுதாய விரவாக அது அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடு திட்டமிட்டுத்தான் அதனை வகுத்தேன்.

உலக சமாதானம் வேண்டுமானால் முதலில் அதற்கு மனித சமுதாயத்தில் அமைதி வந்தாக வேண்டும். தன்னிலை விளக்கத்தின் மூலம் தான் அந்த அமைதி வரமுடியும். தன்னிலை விளக்கத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள். அதனைப் பெற்று விட்டால் மட்டுமே அமைதி வந்து விடாது. தன்னிலை விளக்கம் என்ற விளக்கின் வெளிச்சத்தில் உங்கள் வாழும் முறையைச்சோதித்துக் கொள்ள வேண்டும். அவ்வெளிச்சத்தில் உங்கள் வாழ்க்கையைத் திட்டமிட்டு நடத்த வேண்டும்.

உங்கள் குடும்பத்தில் அமைதி இருக்கிறதா? பிணக்கிருக்கிறதா?  என்று ஆராயுங்கள். எல்லோரது வாழ்க்கையிலும் பிணக்குத்தான் மலிந்திருக்கிறது. பிணக்கானது சிலர் வாழ்க்கையில் சிறிதாயிருக்கலாம். வேறு சிலரது வாழ்க்கையில் பெரிதாயிருக்கலாம். ஆகவே, பிணக்கில்லாத வாழ்க்கையை எவன் அமைத்து அதன்படி வாழ்கிறானோ அவன் தான் ஞானி. ஒருவர் பெற்ற ஞானத்தைப் பரிசோதிக்கக் கருவி ஒன்று இருக்குமானால் அது அவரது குடும்ப அமைதி தான்.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)


Wednesday, 16 November 2011

ஆளுமைத் திறன்.Davaram,I.P.S.,

ஆளுமைத் திறன்.

இயற்கை வளங்களை வாழ்வில் வழமாக உருமாற்றியும் அழகு படுத்தியும் வாழ்ந்து வரும் மனித இனம் மற்றவர்களோடு பிணக்கின்றி வாழ வேண்டியது மிக அவசியமாகின்றது. இந்த நெறியே அறம் எனப்படுகிறது. இந்தப் பெருநோக்கத்தில் வாழ மனதையும் செயல்களையும் சிந்தனையின் உயர்வுக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ளவேண்டும். பல ஆயிரம் தலைமுறைகளாக ஆற்றிய எண்ணம், செயல் பதிவுகளால் வடிவம், தரம், திறம் அமையப்பெற்ற மனிதன் தனது ஆளுமை வளத்தைச் சிறப்பித்துக் கொள்ள வேண்டுமெனில், அதற்கு ஏற்ற உளப் பயிற்சியம் செயல் பயிற்சியும் வேண்டும். புலன்கள் மூலம் உணர்ச்சி நிலையில் வாழும் மனிதனுடைய மன அலைச்சுழல் வினாடிக்கு 14 முதல் 40  வரையில் (Beta Wave) இயங்கிக் கொண்டிருக்கிறது. சிந்தனையாற்றல் பெருக வேண்டுமெனில், மனம் வினாடிக்கு 14 சுழலுக்குக் குறைவான அலை இயக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

மனித அமைப்பில் பரு உடல்(Physical Body),நுண்ணுடல்(Astral Body)    பிரணவ உடல் அல்லது சீவகாந்த உடல் (Causal Body) ஆகிய மூன்றும் ஒன்றுக்குள் ஒன்றாக இணைந்து செயல்புரிகின்றன.சூக்கும உடலாகிய உயிர்த்துகள் மீது (Life Force)  மனம் வைத்து அகநோக்கும் பயிற்சியினைப் பழக வேண்டும். இந்தப் பயிற்சியில் அனுபவம் பெற்றவர் மூலமே இதை உணர்ந்து பழகும் பயிற்சியே அகநோக்குப்பயிற்சி எனப்படுகிறது. இப்பயிற்சியால் மன அலைச்சூழல் படிப்படியாகக் குறைந்து வினாடிக்கு 1லிருந்து 3 வரையில் வருமேயானால் மனம் அமைதி நிலைக்கு வரும். இந்த மன நிலையில் மனம், உயிர், இறைநிலை என்ற மூன்று மறைபொருட்களையும் உணரும் திறமை மனித மனதுக்குக் கிடைக்கும். தேவையில்லாத, துன்பமே  தரும் பதிவுகளை மாற்றி ஆழுமை வளத்தைச் சிறப்பித்துக் கொள்ளவும், இந்தப் பயிற்சியோடு அகத்தாய்வுப் பயிற்சிகளையும் பயின்று செய்தால் மனிதனுள் அடங்கி இருக்கும் ஆற்றல்கள் முழுவதையும் வெளிப்படுத்திப் பயன் கண்டு தானும் சிறப்பாக வாழ்வதோடு, குடும்பம், சுற்றம், ஊர், உலகம் என்ற அளவில் தன் கடமைகளைச் செய்து நிறைவு பெறலாம். அமைதியும் இன்பமும் பெறலாம்.
----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Monday, 14 November 2011

இனிமையான வாழ்வுக்கு இன்றியமையாத சாதனம்.

திரு.அண்ணாத்துரை மயில்சாமி

இனிமையான வாழ்வுக்கு இன்றியமையாத சாதனம்.

மனிக வாழ்வுக்கு இறையுணர்வு மிகவும் அவசியமானது. இறையுணர்வு என்பது நம்பிக்கை. அது என்ன நம்பிக்கை (Fath) என்றால்  “ஒரு பெரியசக்தியானது பிரஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது, அது என்னள்ளும் இருக்கத்தான் வேண்டும், நான் பிறப்பதற்கு முன்னேயும் இருந்தது, எனக்குப் பின்னாலேயும் இருக்கும்.

அந்தச் சக்தி முன்னும் பின்னுமாக எல்லா இயக்கங்களையும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால், இப்பொழுதும், எப்பொழுதும் அது ஊடுருவி நிறைந்து இயங்கிக் கொண்டுதானே இருக்கும்” – இவ்வாறு நமக்கு  அப்பாற்பட்ட ஒரு சக்தி முழ்மையாக இருக்கிறது என்ற ஒரு நம்பிக்கையின் மேல் செயல்களை ஒழுங்கு செய்து கொள்வதுதான் “மதம்” (Religion) என்பதாகும்.

அதற்கு மேலாக எவ்வாறு அந்தப் பரம்பொருள் நிறைந்த ஒன்று, மறாத  ஒன்று, எல்லாவற்றையும் சரியாக இயங்கிக் கொண்டிருக்கிறது, அது நமக்குள்ளாக எப்படி இயங்கிக் கொண்டு இருக்கிறது, நாமாக எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்று அறிந்து, அதிலேயே உறைந்து, அதுவே தானாக, தானே அதுவாக இருப்பது தான்  “ஞானம்”.
----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Friday, 11 November 2011

மூலிகைவளம்: மூக்கிரட்டை

மூலிகைவளம்: மூக்கிரட்டை
எனது வலைப்பதிவை படித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி பார்த்தீபன். இந்த மூக்கிரட்டை இடையர்பாளையம் சாலையோரங்களில் தற்போது அதிகமாகத் தென்படும். படர்ந்திருக்கும். இலையைத் திருப்பிப் பார்த்தால் வெண் சாம்பல் நிறத்தில் தென்படும். பாருங்கள் பயனடையவும். மிக்க நன்றி.

Thursday, 10 November 2011

உலகக் குடும்பம்
உலகக் குடும்பம்

நாம் எல்லோரும் உலகம் என்ற மண் மீது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கிருப்பது ஒரே சூரியன் தான். நமக்கு ஏற்படும் நீர் தேவைகளை  முடிப்பதற்கு இருப்பது ஒரே கடல் தான். நாம் எல்லோரும் மூச்சு விடுவதற்கு உள்ள காற்றும் ஒன்றுதான். இவ்வற்றில் ஒன்றைக்கூட நம்மில் எவருமே உற்பத்தி செய்தது இல்லை. நமது முன்னோர்களும் செய்ததில்லை.

எல்லாம் வல்லதாகிய இறைநிலை என்னும் இயற்கையானது தனது பூரணம், பேராற்றல், பேரறிவு என்ற மூலதனத்தைக் கொண்டும் அதன் பரிணாமம், இயல்பூக்கம், கூர்தலறம் என்ற இயக்கநியதிகளைக்கொண்டு, வான் மண்டலத்தையும், உலகையும் உருவாக்கி வாழ வைத்திருக்கிறது. நமக்கு அன்னையாகவும், தந்தையாகவும் உள்ள அருட் பேராற்றலான இயற்கை நாம் அனைவரும் நலமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ எல்லா வளங்களையும் நிறைவாக அமைத்துக் கொடுத்திருக்கிறது. என்பது சந்தேகமில்லாமல் தெரிகின்றது அல்லவா?


நமது சிந்தனையை உயர்த்தி இவற்றையெல்லாம் நாம் உணரும் போது நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடன் பிறந்தவர்கள் என்பது சந்தேகமில்லாமல் தெரிகின்றது அல்லவா?
----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)