Thursday 17 May 2012

கடமை.






கடமை.

நாம் இந்த உலகத்திற்கு வந்தோம். ஒரு நாள் இதை விட்டுப் போகப் போகிறோம். இந்த பூமியில் நம்முடன் எதுவும் கொண்டு வர வில்லை. நாம் புறப்படும் பொழுது எதுவும் எடுத்துச் செல்ல முடியாது. ஒவ்வொருவருடைய தன்மைக் கேற்ப சூள்நிலை சந்தர்ப்பங்களால் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை ஏற்படுகிறது. ஒவ்வொரு செயலிலும் எந்த அளவு நன்மை செய்யமுடியும் என்பதைச் சிறிது எண்ணிப்பாருங்கள்.

உங்கள் மனதை கடமையில் செலுத்துங்கள். உங்கள் முயற்சிக்க அப்பால் எது நடந்தாலும் அது இறைவனின் விருப்பம் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.  அது தான் இயற்கைச் சட்டம். நான் பிறப்பதற்கு முன்பே அந்த ஆற்றல் இருந்துகொண்டிருக்கிறது. நாம் இறந்த பின்பும் அந்தப் பேராற்றல் இருந்து கொண்டிருக்கும். இதில் நான் கவலைப்படுவதில்  என்ன இருக்கிறது.  கவலையே கவலைப்படுவதற்கு விட்டு விடுங்கள்!  நாம் வாழும் காலத்தில் நமக்காகவும், சமூதாயத்திற்காகவும் ஆற்ற வேண்டிய பொறுப்புக்களைப் பெற்றிருக்கிறோம்.  அவற்றை நன்குணர்ந்து நல்ல முறையில் நமக்கும், மற்றவர்களுக்கும் திருப்தி தரும் வகையில்  நன் கடமைகளைச் செய்ய வேண்டும். அதன் பிறகு மனம் அமைதியடையும். உங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குறிய வகையில் புதுப்பிரச்சனைகள் மேலும் ஏற்படுத்தாத வகையில்  பேராற்றல் பெற்று உங்கள் மனம் சிறந்து விளங்கும்.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Monday 14 May 2012

உள்ளத்தனைய உயர்வு.




உள்ளத்தனைய உயர்வு.

தீய எண்ணங்களைக் கண்டு பயப்பட வேண்டும். நீங்களே முயற்சி செய்து ஒரு நல்ல எண்ணத்தைத் தொடர்ந்து மனதில் வைத்திருங்கள்.  தீய எண்ணம் வருவதற்கு இடமிருக்காது. எந்நேரமும் ஏதேனும் ஒரு சங்கற்பத்தை மனதில் சுழலவிட்டுக் கொண்டு இருந்தாலும் கூட அது  தீய எண்ணத்தை விலக்கும். வாழ்க்கையில் அந்தந்த காலகட்டத்தில் ஏற்படும் பிரச்சனையை வெற்றி கொள்வதற்கான சங்கற்பமாகவும் அது இருக்கலாம். அல்லத்து வாழ்க்கையில் முன்னேற்றத்தின்கான   பொதுவானதொரு சங்கற்பமாகவும் இருக்கலாம்.

அன்பர்களே! தீய எண்ணத்திற்கு ஒருபோதும் மனதில் இடம் அளிக்காதீர்கள். நல்ல எண்ணத்தைத் தேடிப்பிடித்து மனதில் ஏற்றி வையுங்கள்.  உங்கள் மனதில் அடிக்கடி வந்து போகும் எண்ணங்களையும் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களையும் ஆராயுங்கள். விழிப்பு நிலை, எண்ண ஆராய்ச்சியை வளப்படுத்தும். எண்ண ஆராய்ச்சி, விழிப்பு நிலையை ஊக்குவிக்கும்.

எண்ணம் தான் அனைத்துமே! எண்ணத்துக்கப்பால் ஒன்றுமே இல்லை. நன்மையும் தீமையும் எண்ணத்துள்ளே! வெற்றியும், தோல்வியும் சிரிதும் பெரிதும் எண்ணத்துள்ளே! வெற்றியும் தோல்வியும் எண்ணத்தாலே! பிரபஞ்ச இயக்கங்கள் அனைத்திலும் எண்ணம் தான் உயர்வானது. இன்பமோ, துன்பமோ எண்ணத்திற்கு அப்பால் இல்லை.


எனவே அன்பர்களே! எண்ணத்தின் தாழ்வு உங்கள் தாழ்வு. பிறகு யார்மீதும் குறை சொல்லிப்பயனில்லை. எண்ணத்தின் உயர்வு உங்கள் உயர்வு. எண்ணத்தின் உயர்வால் உலகுக்கும் உயர்வு. எண்ணத்தை ஆராய்ந்து எண்ணத்திற்கு உயர்வளித்து உங்களுக்கும் உலகுக்கும் உயர்வு கிடைக்கச் செய்ய இன்று முதல் சங்கற்பம் செய்து கொள்ளுங்கள்.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

பேரின்ப வெள்ளம்.




பேரின்ப வெள்ளம்.

அன்பும் கருணையும் உடைய தெய்வ நிலையானது விண் முதல் ஆற்றிவாகி, மனித மனத்தின் மூலம் தனது பரிமாணப் பயணச் சரித்திரத்தை உள்ளுளர்வாக க் காட்டிய பேரறிவிற்கு நன்றி க்கூறுமிடத்து, அத்தகு உள்ளுணர்வு அடைந்த நன்மையே இறைநிலைக்கு அர்பணம் செய்து மகிழ்ச்சியடைவோம்.

மேலும் உலக வாழ்வில் உயிரினங்களின் உற்பத்திக்கு ஏற்ற வகையில் பெண்ணினத்தை வடிவமைத்து எல்லா உயிர்வகைக்கும் அன்பு காட்டி, கருணையை வழங்கிக் காக்கும் அந்தப் பேராதார இறை நிலைக்கு நன்றி கூறி மன நிறைவு பெறுவோம்.

எல்லா உயிர் வகைகட்கும், உணவாகவும் மற்றும் வாழ்க்கை வசதிகளாகவும், சிக்கலில்லாமலும், வறையறையின்றியும், தங்களது வளர்ச்சியை அர்பணித்து உலகைக் காத்து வருகின்றன தாவர இனங்கள்.

அதற்கு தாவர வர்கங்களை அன்போடும், கருணையோடும் உருவாக்கி, இதர உயிரினங்களுக்கு அளித்துள்ள பேரன்புக்காகவும், கருணைக்காகவும் இறைநிலைக்கு நன்றி கூறி, அப்பெருமகிழ்ச்சியான பேரின்ப வெள்ளத்தில் திளைப்போம்.

ஒவ்வொரு நாளையும் இறைநிலையின் அன்பின் ஊற்றுப் பெருக்க நன்னாளாகவே கருதி என்றும் கொண்டாடுவோம். 

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Sunday 13 May 2012

கட்டாயம் கற்க வேண்டிய தொழில்கள்.




கட்டாயம் கற்க வேண்டிய தொழில்கள்.

1விவசாயம், 2. நெசவு, 3. சமையல், 4. வீடுகட்டல், 5. இயந்திரரங்கள், விஞ்ஞானக் கருவிகள் இவற்றின் நுட்பங்கள் அறிந்த அவற்றை இயக்குதல், உற்பத்தி செய்தல் ஆகிய ஐந்து அடிப்படைத் தொழில்களையும், ஒவ்வொருவரும் இருபது வயதுக்குள்ளாகக் கற்றுக்கொள்ளவும், மேலும் யார்யாருக்கு எந்தெந்தத் தொழிலில், கலைகளில் விருப்பம் இருக்குமோ, அவைகளைக் கற்றுத் தேரவும், உலக மக்கள் வாழ்க்கைத் தேவைகளை அறிந்து அவைகளின் திறமை, சக்திகளைப் பயன்படுத்தும் புதிய முறையில் மனித குல வாழ்க்கையை இன்பமயமாக்கவும் தகுந்த முறையில் நாம் தொழில் கல்வி முறையை வகுக்கவேண்டும்.
உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும், மனித வாழ்விற்கு இன்றியமையாத மேலே காட்டியுள்ள ஐந்து அடிப்படைத் தொழில்களையும் கட்டாயம் கற்கவும், அவரவர்களின் சிறப்புத் திறமை, ஆர்வம் இவைகளுக்கேற்ப, குறிப்பான வேறு தொழில்கள் அல்லது கலைகளைக் கற்கவும் வசதி செய்யவேண்டும்.

ஒவ்வொரு குழந்தையும், தொழிற்கல்வி கற்கும் காலத்தில் மனோத த்துவம், சுகாதாரம், பொருளாதாரம்,  அரசியல் விஞ்ஞானம் என்ற ஐவகை வாழ்க்கைத் தத்துவத்தையும் வயதுக்கேற்றபடி அறிந்து, உயர் நோக்கச் செயல் திறமைகளையுடையவர்களாக வேண்டும்.

மனித இனத்திற்கு வாழ்க்கை – அறிவும், செயல் – திறமையும் தான் செல்வமாகும். அந்தச் செல்வம் குழைந்தகளிடத்திலே சிறுவயது  முதலே  வளர வேண்டும். இதுவரையில் மனிதன் அடைந்துள்ள  முன்னேற்றங்களின் இறுதிப் பயனாக இருக்க வேண்டியது உயர்தர முறையில் குழந்தைகளை வளர்பதேயாகும்.
----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்
----------------------------------------------------------------------(தொடரும்)