Saturday, 24 December 2011

வெற்றி பெற வழி.
வெற்றி பெற வழி.

தனக்கும், பிறருக்கும் தற்காலத்திலும், பிற்காலத்திலும் துன்பம் வராத செயல்கள் செய்ய வேண்டும். கூடுமான வரையில் பிறருக்கு உதவ வேண்டும்.  இதுதான் வேதங்கள், புராணங்கள் சொல்லும் சாரம். (Essence) ஆகும்.

ஏதோ சந்தர்ப்ப வசத்தால் பிறருக்கு துன்பம் வந்து விடுகிறது. அவர்களால் தீர்த்துக் கொள்ள முடிவதில்லை. அப்போது இயன்ற வரையில் நாம் அப்படிப்பட்டவர்களின் துன்பத்தைத் தீர்கின்றபோதும், அதனால் நமக்குத் துன்பம் வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நமக்குத் துன்பம் வந்து, நாம் பிறரிடம் போய் அதைத் தீர்க்கும்படி கெஞ்சும் நிலை வந்து விடக்கூடாது. அல்லவா? அந்த நிலையில் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும். தனக்கும் துன்பமில்லாது, பிறருக்கும் துன்பம் விளைவிக்காத வாழ்க்கையில், நமக்கு என்னென்ன தேவையோ, அப்படிப்பட்ட சூழ்நிலை தானாகவே அமையும். இதற்காகக் கெஞ்சிக் கேட்டு ஒன்றும் நாம் பெற வேண்டியதே இல்லை.

எந்த இடத்திலே, எந்தக் காலத்திலே, எந்த நோக்கத்தோடு, எந்த செயலை நீ எவ்வளவு திறமையாகச் செய்கிறாயோ அதற்குத் தகுந்த வாறே உனக்கு விளைவும் வரும். வெற்றுயும் வரும்.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Wednesday, 21 December 2011

வாழ்த்து.


பாஸ்கர்.


வாழ்த்து.

வாழ்த்து எல்லா மந்திரங்கட்கும் மேலான  திருமந்திரமாகும். ஒருவரை நாம் வாழ்த்தும் போது அந்த உயிருக்கும் நம் உயிருக்கும் ஒரு உயிர்த் தொடர்பு – சங்கிலித் தொடர்பு ஏற்பட்டு வாழ்த்து அதன்மூலம் பயந்து வேலை செய்யும். ஒருவரை நாம் வாழ்த்தும் தகுதியைப் பெறுகிறோம். அந்த அளவுக்கு நமது பெருந்தன்மை தானே வளர்ச்சியடைகிறது. இந்த வாழ்த்து பேரறிவில் பதிவாகி, அதன் மூலம் அடிமனதிற்கும் பரவி, நாளாக நாளாக நட்புணர்ச்சி வளர உதவும், வெறுபுபணர்ச்சி தானே மறைந்து விடும்.

ஒற்றுமையின்றி பிணங்கி நிற்கும் ஒரு மகனைத் தந்தை தினசரி வாழ்த்திக் கொண்டே இருப்பாரானால் இருவருக்குமிடையேயுள்ள உயிர் தொடர் மூலம் அவ்வாழ்த்துப் பரவி மகனுடைய மூளையில் பதிந்து அவனைச் சிறுகச் சிறுகத் திருத்தி, தகப்பன் விருப்பப்படி நடக்கும் படி செய்து விடும். கணவன் மனைவியிடையேயும் இப்படித்தான். இது நான் அனபவமாகப் பல குடும்பங்களில் கண்ட உண்மையாகும்.

வாழ்த்தின் மூலம் தேவையான எல்லா நன்மைகளும் கிட்டும். ஆதலால் தான், கடவுளைக் கூட வாழ்த்தும் பக்தர்களையும் பக்திப் பாடல்களையும் நாம் பார்க்கிறோம். கடவுளை வாழ்த்துவதன் மூலம் எல்லோரையும் வாழ்த்தும் நற்பழக்கத்தை மனிதன் ஏற்படுத்திக் கொண்டான். இதனால் மனவளம் பெருகுவது நிச்சையம்.

"அருட்பேராற்றல் கருணையினால்
உடல் நலம், நீளாயுள், நிறைச்செல்வம்,
உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க
வளமுடன்’ என்று வாழ்த்திப் பயன்பெறுவோம்."

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Tuesday, 13 December 2011

வாழ்வாங்கு வாழ வழி.


வாழ்வாங்கு வாழ வழி.

நாம் வாழும் காலத்தில் உடலையும் மனத்தையும் சரிப்படுத்திக் கொண்டால், நமக்குப் பின்னாலே பிறக்கக் கூடிய குழந்தைகள் எப்படியிருக்கும் என்று பார்த்தீர்களானால் அவை ஆரோக்கியமான கட்டமைப்புக் கொண்டதாகத் திகழும்

அவ்வாறு நல்ல குழந்தைகளை உலகுக்குத் தருவதற்கு நமது உடற்பயிற்சி, தியான முறை இரண்டு வாய்ப்பு அளிக்கும். வேலைப்பழு அதிகமாகும் போது, ஊதியம் தராத உடற்பயிற்சி, தியானம் இவற்றை முதலில் நிறுத்தி விடலாம் என்று எண்ணாது, உள்ளூர இயங்கி வரும் இறைச் சக்திக்குத் தொண்டு செய்யும் வகையிலே உடற்பயிற்சி,  உளப்பயிற்சி செய்து நாளுக்குநாள் மகிழ்ச்சியும் இனிமையும் பெற்று வாழ வேண்டும்.

தினந்தோரும் நாம் காலையிலிருந்து மாலைவரை குடும்பத்தில் பலவகைப் பொருட்களையும், பண்டங்களையும் கையாளுகின்றோம்.  சமையல் பாத்திரங்களையே எடுத்துக் கொள்ளுங்களேன். சுத்துப்படுத்தி வைத்தால் தானே அவை மறுநாளைக்கு உதவும்? அதே போல தினந்தோரும் மனதையும், உடலையும் உபயோகிக்கிறோம், அவற்றில் அவ்வப்போது ஏற்படக்கூடிய களங்கங்களைப் போக்கி, மீண்டும் புதிதாக நாளைய உபயோகத்திற்குத் தயராக வைத்துக் கொண்டால் தானே நன்றாக இருக்கும்?

உடலுக்குக் கொடுக்கக்கூடிய உடற்பயிற்சி, மனதிற்குக் கொடுக்கக்கூடிய தியானம்ப் பயிற்சி உயிர்க்குறுதி அளிக்கும் காயகல்பப்பயிற்சி இம்மூன்றும் உடலையும், உள்ளத்தையும், உயிரையும் மேன்மைப்படுத்தி, தூய்மைப்படுத்தி மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி வகுப்பனவாகும்.,

----------------------------------------------------------------------அருள் தந்தை
வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Friday, 25 November 2011

நினைப்பது நடக்கும்.

இராசசேகரன் (எஸ்.பி.)நினைப்பது நடக்கும்.

விழிப்பு நிலையிலேயே இருக்கப் பழகிக் கொண்டோமானால், மற்றவர்களுடைய எண்ண அலைகள் தீமை விளைவிப்பவனாக  இருந்தாலும், உணர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பவையாக இருந்தாலும், அவை நம்மைப் பாதிக்கா, உதாரணமாக, நான்கு வானொலி நிலையங்கள் நான்கு விதமான வேறுபட்ட நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் ஒலிபரப்புகின்றன. நம் ரேடியோவை எந்த அலை நீளத்தில் வைக்கிறோமோ அது மாத்திரம் தான் இங்கை கிடைக்கும். மற்றவை எல்லாம் வந்து மோதும், ஆனால் கேட்காது.

அதுபோலவே தேவையற்ற அலைக்கழிப்பும் பாதிப்பும் இல்லாமல் விட்டுவிலகி எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த நிலைக்கு ஏற்ப நமக்கு என்ன தேவையோ அது கிடைக்கும். நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை நினைப்போம். நாம் என்ன நினைக்கிறோமோ அதைச் செய்ய முடியும் என்ற அளவிலே மனித த்திறமை வெளிப்படுகிறது. இந்த மனித த்திறமை அதிகரிக்க அதிகரிக்க என்ன ஆகும்? நாம் எங்கு போனாலும், நமக்காக மற்றவர் தாமாகவே அந்த அலையிலே கட்டுப்பட்டு, நம் மதிப்பை உணர்ந்து புரிந்து கொள்ள அவர்களுக்கு எண்ணம் தோன்றும். எங்கே போனாலும் நமக்கு வெற்றியாகவே இருக்கும்.

அப்படி எங்கேயாவது வெற்றி இல்லாமல் தடை ஏற்பட்டாலும் அந்த த்தடையினால் நமக்குக் கெடுதல் இல்லை. "நம்மைத் திருப்பி விடுவதற்காக இந்த அலை நீளத்தில் தேவையில்லாதவற்றைத் தள்ளி விடுகிறது. அதனால் அந்த வேலை நடக்கவில்லை" என்று எண்ணி அமைதி அடைந்தால், எந்தக் காலத்தில் எந்த சூழ்நிலையில் அந்த  வேலை நடக்க வேண்டுமோ அது தானாகவே நடந்து விடும்.

முற்றறிவு (Total Consciousness) என்று சொல்லக்கூடிய பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கக் கூடிய இதே அறிவு தான் எங்கேயும் இருக்கிறது. அது தொகுப்பறிவு.(Collective Knowledge) அதனால், அந்த இடத்திலுரிந்து நாம் எண்ணிய எண்ணத்திற்குரிய காலமும், வேகமும்  வரும்போது அது தானாகவே மலர்ந்து செயலாகிறது.
----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Wednesday, 23 November 2011

மனநிறைவு.ரகுபதி (எஸ்.பி.)
 
மனநிறைவு.

பேரியக்க மண்டலம் கணக்கிட இயலாத பருமன் உடையது. அதில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், (சூரியன்கள்) கோள்கள் அதனதன் விரைவிலே, பாதையிலே சற்றும் பிறழாமல் உலவிக்கொண்டிருக்கின்றன. மனிதர் வாழும் இப்பூவுலகம் மிகப் பெரியது.  கணக்கிட முடியாத காலத்தையுடையது. மனித இனம், மற்ற உயிரினங்கள் எண்ணிலடங்கா.

இவையெல்லாம் இறையென்ற பூரண ஆற்றலின் அழுத்தமென்ற விரைவாலும் ஒழுங்காற்றல் என்ற பிறழா நெறியாலும் பிசகாமல் சத்தியம் தவறாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இப்பேராற்றலின் கருணையினால் ஒவ்வொரு சீவனும் பிறக்கும் போதே அதன் வாழும் காலம் வரைக்கும் தேவையான அனைத்தும் இருப்பாகவும் இணைக்கப்பட்டும் உள்ளன. இவற்றையெல்லாம் நமது மனதை விரித்து எண்ணிப் பார்ப்போம்.

இறைநிலை, பேரியக்க மண்டலம், உயிரினங்கள், இன்ப துன்ப விறைவுகள், எண்ணம், செயல்கள், விருப்பம், நிறைவு என்ற எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்ந்து இணைந்த ஏற்பாடாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நமக்கென்ன குறை? என்னென்ன குறை? உண்மையில்  குறையே இயற்கையில்  எள்ளளவும் இல்லை.

பின் ஏன் மனக்குறை? உடல் நலக்குறை?

மனித உள்ளத்தில் தேவையுணர்வு, விருப்பம் என்று இரண்டு எண்ண எழிச்சிகள் உள்ளன. தேவை இயற்கையானது. உடலையும், உயிர் வளர்ச்சியையும் ஒட்டி எழுவது. விருப்பம் தேவையிலிருந்தும் எழலாம். கற்பனையாகவும் பழக்கத்திலிருந்தும் எழலாம். தேவையை ஒட்டியதாகவே விருப்பத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டால் நீயே ஞானி. கற்பனையாகவும் பழக்கத்தை ஒட்டியும் எழும் விருப்பங்களை அப்படியே செயல் படுத்த எண்ணத்தை, உடலை இயங்க விடும்போது உனக்கு அமைந்த ஞானத்தைப் பயன்படுத்தாத வீண்ணாகிறாய்.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Friday, 18 November 2011

குடும்ப அமைதியே ஞானத்திற்கு வழி.குடும்ப அமைதியே ஞானத்திற்கு வழி.

நாம் ஆன்மீக வாழ்வு நடத்த முயல்கிறோம். மற்றவர்கள் அவரவர் வழியில் நடப்பார்கள். நம் குடும்பத்திலேயே கூட அத்தகையவர்கள் இருப்பார்கள். மற்றவர்களின் வழியில் நம் ஆன்மீக வாழ்வு பாதிக்கப்படக்கூடாது. அவ்விதமாக – எல்லோருக்கும் ஒத்ததாக நம் வாழ்வு முறையை அமைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் நம் வாழ்வு ஆன்மீக வாழ்வாக இருக்க வேண்டும்.

மனவளக்கலையை நான் வகுத்த போது, குடும்பத்திலிருந்து அமைதி தொடங்கி, சமுதாய விரவாக அது அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடு திட்டமிட்டுத்தான் அதனை வகுத்தேன்.

உலக சமாதானம் வேண்டுமானால் முதலில் அதற்கு மனித சமுதாயத்தில் அமைதி வந்தாக வேண்டும். தன்னிலை விளக்கத்தின் மூலம் தான் அந்த அமைதி வரமுடியும். தன்னிலை விளக்கத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள். அதனைப் பெற்று விட்டால் மட்டுமே அமைதி வந்து விடாது. தன்னிலை விளக்கம் என்ற விளக்கின் வெளிச்சத்தில் உங்கள் வாழும் முறையைச்சோதித்துக் கொள்ள வேண்டும். அவ்வெளிச்சத்தில் உங்கள் வாழ்க்கையைத் திட்டமிட்டு நடத்த வேண்டும்.

உங்கள் குடும்பத்தில் அமைதி இருக்கிறதா? பிணக்கிருக்கிறதா?  என்று ஆராயுங்கள். எல்லோரது வாழ்க்கையிலும் பிணக்குத்தான் மலிந்திருக்கிறது. பிணக்கானது சிலர் வாழ்க்கையில் சிறிதாயிருக்கலாம். வேறு சிலரது வாழ்க்கையில் பெரிதாயிருக்கலாம். ஆகவே, பிணக்கில்லாத வாழ்க்கையை எவன் அமைத்து அதன்படி வாழ்கிறானோ அவன் தான் ஞானி. ஒருவர் பெற்ற ஞானத்தைப் பரிசோதிக்கக் கருவி ஒன்று இருக்குமானால் அது அவரது குடும்ப அமைதி தான்.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)