Sunday 23 August 2015

மனிதனின் சிறப்பு.

வாழ்க வையகம்---------------------------------------------------வாழ்க வளமுடன்.

மனிதனின் சிறப்பு.

உலகிலுள்ள எல்லாத் தோற்றங்களிலும் எல்லா உயிர்களிலும் சிறந்த மேலான ஒரு இயக்க நிலை மனித உருவம். எல்லாம் வல்ல இறை நிலையை முழுமையாக எடுத்துக் காட்டும், பிரதிபலிக்கும் கண்ணாடி மனிதனே.

உடலுக்குள் உயிர், உயிருக்குள் அறிவு, அறிவுக்குள் அருட் பேராற்றலின் இயற்கை (மெய்பொருள்) இவ்வாறு ஒன்றில் ஒன்றாக நிலை கொண்டு மனித உரு சிறபாக,  வியத்தகு முறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. உடல் குறிப்பட்ட அளவு பருமனால் எல்லை உடையது. உயிரானது நுண்ணியக்க மூலக்கூறான விண் எனும் நுண் துகள்கள் கோடிக்கணக்கில் ஒன்றிணைந்து ஒரு  தொகுப்பாக இயங்கும்.  ஆற்றல். இந்த உயிரானது உடலுக்குள் சுருங்கவும், உடலுக்குப்  புறத்தே தக்க அளவு விரிவும் கூடியது.

அறிவு என்பது உயிரை மையமாக க் கொண்ட மெய்பொருள். உடல் மூலம் ஆற்றிய வினைகளினால் பெற்ற அனுபவம்,  சிந்தனை, கற்பனை இவற்றிற்கேற்ப விரிந்தும், சுருங்கியும் செயல்புரியும் ஆற்றலுடையது. அறிவில் அடங்கியுற்ற இரகசிங்கள் எண்ணி அறிய  முடியாதவை. எல்லாம் வல்ல முழுமுதற் பொருளான மெய்ப்பொருள்  உயிராற்றலை மையமாகக் கொண்டு தனது அசைவினாலும், உணர்வாலும் ஆற்றிய வினைப்திவுகள் அனைத்தும்அடக்கம் பெற்ற கருவூலம் அறிவு  ஆகும். இது உயிர்துகளின் மையத்தில் தொடங்கி உயிர்த்துகள் தற்சுழற்சியால் விறையும் சீவகாந்த சக்தி மூலம் உடல் வரையிலும் மேலும்  உடலுக்கு வெளியே புலன்கள் மூலம் உணரும் பொருட்கள் வரையிலும் யூகத்தால்  பேரியக்க மண்டலம், அதற்கப்பால் நிலைத்த சுத்தவெளி எனக் கருதப்படும் மெய்ப்பொருள் வரையிலும் விரிந்து சுருங்கும் இயலபுடையது.

எல்லாம் வல்ல மெய்பொருளே சுத்தவெளியாகவும், மெய்ப் பொருளாகவும் விண் முதல் மண் வரையிலான பஞ்ச பூதங்களின் இணைப்பால் ஆகிய பேரியக்க மண்டலத் தோற்றங்கள் அனைத்திலும் இயக்க ஒழுங்காகவும், உயிர்களிடத்தில் புலனுணர்வாகவும், மனிதனிடத்தில்  எல்லாமாக இருக்கும், தன் முழுமையை உணரும் பேரறிவாகவும் இருக்கிறது. இந்த நானுகு  தத்துவங்களும் ஒன்றிணைந்த மாபெரும் வல்லமையுடைய அறிவிலும், செயலிலும் சிறந்ததோர் உருவம் மனிதன்.

----------------------------------------------------------------------------------------அருள் தந்தை.

 

Saturday 22 August 2015

புலன் வழி தொடர்பு.

வாழ்க வையகம்-------------------------------------வாழ்க வளமுடன்.



புலன் வழி தொடர்பு.

காயின்றி பழம் இருக்க முடியாது.  காயாக இருக்கும் போது சுவை வேறுதான். ஆனால் காய் வேறு, பழம் வேறு அன்று.  காயினுடைய முதிர்ச்சிதான் பழம். எந்த ஞானியாக இருந்தாலும் உடலை எடுத்துவுடனே ஐந்து புலன்கள் தான் இயங்க ஆரம்பிக்கும், மூளை வளர்ச்சி வளரும் வரையிலே அன்னை வயிற்றிலே ஒரு air-conditioned  நிலை, சமமான உணர்வு, குழந்தைக்கு உணர்ச்சி இல்லை. வெளிச்சம் இல்லை, சுவையில்லை, மனம் இல்லை, ஐந்து புலன்களும் இயங்க வில்லை, வெளியே வந்து விழ்ந்தவுடனே, அந்தச் சூழ்நிலைக்கும் இந்தச் சூழ்நிலைக்கும் உள்ள வேறுபாட்டின் காரணமாக உடல் முழுவதும் பற்ற எரிவது போன்ற உணர்ச்சி. நாம்   air-conditioned  அறையிலிருந்து வெளியே வந்தோமேயானால், சில இடங்களில் பளிச்சென்று  அடிப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றதல்லவா, இது போன்றே பிறந்த குழந்தை உணர்வைப் பெறுகின்றது, வீர், வீரென்று கத்துகின்றது.

அதன் பிறகு சிறிது நேரத்திலே சுவைக்கச் சர்க்கரைத் தண்ணீர் கொடுக்கின்றார்கள். ஏதோ வெளிச்சம் தெரிகின்றது, பார்க்கின்றது, ஏதோ பேசுகின்றார்கள் கேட்கின்றது. இப்படி ஒவ்வொன்றாகப் பலன்கள் செயல்பட ஆரம்பிக்கின்ற பொழுது முதலில் ஞானியா இருந்தாலும் அவர்களுக்கும் புலன் வழிதான் உலகத் தொடர்பு ஏற்படுகின்றது.  அதன் பிறகுதான் உள்ளோளியாக உள்ள அறிவு பிரகாசம் அடைகின்றது.

-----------------------------------------------------------------------அருள் தந்தை.




Thursday 20 August 2015

சிந்தனையின் சிறப்பு.

 வாழ்க வையகம்----------------------------------------------------வாழ்க வளமுடன்.



சிந்தனையின் சிறப்பு.

நம் வாழ்க்கையில் அவ்வப்போது நான் எதைச் செய்வது என்ற ஒரு சிக்கல் வரலாம், அல்லது  பெருமளவிலான ஒரு மகிழ்ச்சியே கூட வரலாம். அந்தச் சிக்கலிலே அழுந்திவிடக் கூடாது. அல்லது அந்த மகிழ்ச்சியிலே அழுந்தி விடக் கூடாது.  இந்தச் சிக்கலிலேயிருந்து விடுபட வேண்டிய வழி என்ன என்று நினைத்தாலே போதும். சிக்கலிலே தீர்த்து வைப்பதற்குத் தயாராக இருக்கிறான். அவன் பக்கம் திரும்புவதற்கு வழி காண வேண்டும் என்று சொல்கிறேன்.

சிந்திக்கின்றவர்கள் அதைக் காணுகிறார்கள். சிந்தனைக்கு என்று திரும்பினாலே போதும், மற்றதையெல்லாம் அவன் பார்த்துக் கொள்வான். அதைத்தான் வள்ளுவர்கூட, தனது குறள் ஒன்றில்  ஒரு மனிதன் முயற்சி எடுத்தால் இறைவன் அவனை நோக்கிப் பத்து அடி எடுத்து வைக்கிறான் எனக் குறிப்புத் தந்துள்ளார். அது உண்மை தான். இந்த உண்மையை நேரடியாக, அனுபவப்பூர்வமாகப் பல இடங்களில்  நான் உணர்ந்து இருக்கிறேன்.

--------------------------------------------------------------------அருள் தந்தை.


Tuesday 18 August 2015

ஆண்டவன் கணக்கு.


 வாழ்க வையகம்-------------------------------------------------வாழ்க வளமுடன்.


ஆண்டவன் கணக்கு

ஆண்டவனைக் கேட்டு இனிமேல் எதுவும் வாங்கிட முடியும் என்று நீங்கள் கணக்குப் போட்டால் அவன் ஏமாந்தவன் அல்லன். நீங்கள் செய்துவிட்டுக் கணக்குப் பார்த்து, எனக்கு இவ்வளவு கூலி கொடுக்க வேண்டும் என்று கேட்டாலும் கூடக் கணக்கு சரியாக வராது. முன்பு, பின்பு, செய்திருந்தால் கூடச் செயல் பாக்கி இருந்தால்  பிடித்துக் கொள்வான். அவனிடம் ஒரு நியதி இருக்கிறது. நீங்கள் என்ன செய்தீர்களோ, அந்த செயலின் விளைவாக, நல்லதையோ, கெட்டதையோ உங்கள் நோக்கத்திற்குத் தக்கவாறு, செய்யும் திறனுக்குத் தக்கவாறு, அவன் செயல் விளைவாகத் தருவான்.

நீங்கள் நல்ல நோக்கத்தோடு நல்ல முறையில் செய்தால், செய்த செயலின் விளைவு எல்லாம் நல்ல விளைவாகவே இருக்கும். அதுதான் அவன் கொடுக்கக்கூடிய வரம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இடத்தில், நல்ல செயலையே செய்தோமானால் எல்லாமே நலம் விளையும் என்கின்ற பொழுது சமுதாயத்திற்கு நலம் தரவேண்டும் என்பது ஒன்று ஆயிற்று, கடமை செய்கின்றோம் என்பது ஒன்று ஆயிற்று. இரண்டாவதாக, நல்லதையே ஒவ்வொரு செயலிலும் செய்து கொண்டே வந்தால் , இறைவனைடைய ஆற்றலை நாம் காணக்கூடிய அளவுக்கு ஒரு விழிப்பு நிலை வந்துவிடுகிறது.

பிறகு நான் இறைவனைத் தேடிக் கொண்டோ அல்லது, போற்றிக்கொண்டோ இருக்க வேண்டியதில்ல. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு இயக்கத்திலும் அவனுடைய இருப்பைக கண்டு கொள்ளலாம். ஆக இறைவனே உணர்ந்து கொளவது என்பது சமிதாயத்திற்கு நலம் தருவதாகும். இந்த இரண்டும்தான் எல்லா மதங்களுடைய அடிப்படையா நோக்கம். இந்த அடிப்படையான நோக்கம் வெற்றி பெறவேண்டுமானால் ஒவ்வொருவரும் நல்ல செயலைச் செயவதற்குப் பழகிக் கொள்ள வேண்டும், அதன்பிறகு செய்து பலன் காண வேண்டும். மற்றவர்களுக்கும் அதைப் பரப்ப வேண்டும்.

-----------------------------------------------------------------------------அருள் தந்தை.


Monday 17 August 2015

அறிவின் எல்லை.



வாழ்க வையகம்------------------------------------------வாழ்க வளமுடன்.

அறிவின் எல்லை

நாம் என்னென்ன நினைக்கிறோமோ அந்த அளவு அறிவிலே விரிந்து இருக்கின்றோம். விரிந்து அறிந்த நிலை ஒன்று, அந்த நிலையை ஒட்டி குறிப்பிட்ட அளவுக்கு இயக்கம் ஒரு பொருள் மீதி தனியாக அதைப் பயன்படுத்தும் போது அப்போது விரிந்த நிலைக்கே அறிவாலே எவ்வளவு விளக்கம் பெற்று இருக்கிறோமோ அந்த விளக்கம் அத்தனையும் சிறு சிறு விசயங்களை நாம் தெரிந்து கொள்ளும் போதோ, அதன் மீது மனம் செலுத்தும்போதோ, விரும்பும் போதோ அத்தகைய விரிந்த அறிவினுடைய தன்மை அத்தனையும், அந்த சிறு இயக்கத்திலும் பயன்படும்.

இப்பொழுது ஒரு மாநிலத்தை  ஆளக்கூடிய ஒரு பெரிய  அதிகாரி இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்குச் சாதாரண ஒரு ஊருக்காக திட்டம் ஒன்றை அவர் உருவாக்கும் போதோ, அதை கண்காணிக்கும் போதோ, மாநிலம் முழுமையும்  நிர்வகிக்கக் கூடிய நிலையிலே அந்த ஒரு சிறு விசயம் கூடச் சிந்திக்க முடியும்.அந்த இடத்திலே இருந்து சிந்திக்க க் கூடிய ஒரு எழுத்தர் அல்லது மற்றவர்களுக்கு அந்த இடத்தைப் பற்றி மட்டடுமே சிந்திக்க க்கூடிய மனம், அறிவு இருக்கும். அது போல் நம்முடைய செயலுக்கும்,தன்மைக்கும், இந்தப் பண்பாட்டிற்கும் தக்கவாறு, இந்த அறிவு எந்த எல்லையில் நிற்கிறது என்பதாக இருக்கிறது.

------------------------------------------------------------------------அருள் தந்தை.


Saturday 15 August 2015

உணர்வு, உறவு


 வாழ்க வையகம்.----------------------------------------------------வாழ்க வளமுடன்


உணர்வு, உறவு

உணர்வு, உறவு, துறவு, இந்த மூன்று சொற்களையும் நான் ஆன்மீகத் துறையில்  அடிக்கடி பயன் படுத்தி வரிகிறோம். இப்பொழுது அந்த வார்த்தைகளிலே இன்னும் ஆழமாகச்செல்ல உள்ளோம். உணரவுக்கும் உறவுக்கும் ஓரளவு வித்தியாசம் உண்டு. ஒரு எஜமான் இருக்கிறான், அவர் கீழே ஒரு பணியாள் இருக்கிறான். எதற்காக அந்தப் பணியாள்  அங்கே வேலைக்குச் சேர்ந்தான்? தனக்கு உணவு வேண்டும். அதற்கு ஊதியம் வேண்டும் என்ற எண்ணத்தோடு அவன் தொழில் செய்கிறான்.  வேலையாளாக இருக்கிறான். இங்கே ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது, இது 'உணர்வு'  திட்டமிட்ட முறையில் தான் இந்தத் தொடர்பு அமைந்துள்ளது, எனவே தான் 'உணர்வு' என்ற எல்லைக்குள் அதனை வைக்கிறோம். உறவு என்பது அத்தகையதன்று. இவன்  எஜமான்னாக வேலை செய்கிறான். வேலையாளுடைய பணிகளையெல்லாம், அவற்றின் பயன்களையெல்லாம் அந்த எஜமானன் அனுபவிக்கிறான். காலம் செல்லச் செல்ல எஜமானன் பணியாளைடைய உயிரோடு ஒன்றி விடுகிறான்.  அன்பு கொள்கிறான்,  அவனுடைய சுக துக்கங்களில் கலந்து பார்க்கிறான். அதற்கு மேலாகவும் அந்த சுக துக்கங்களைப் பகிர்ந்த கொள்கிறான். இந்த இடத்தில் தான் 'உறவு' என்பதாக அமைகிறது. அப்படிப் பகிர்ந்து கொள்ளக் கூடிய உறவு எஜமான னிடம் ஏற்பட்ட பிறகு ஆரம்பத்தில் 'உணர்வு' மட்டும் இருந்த அந்தப் பணியாளிடம் என்ன ஏற்படும் என்றால் அவனுக்கும் அதே உறவு ஏற்படும்.

உறவு என்பது உறைந்து போவது, 'தோய்வு' என்றும் சொல்லலாம் அதனை. அந்தத் தோய்வானது இரண்டற இருக்க வேண்டும்.

----------------------------------------------------------------------------அருள் தந்தை.


























































































































































உணர்உணர்வு, உறவுவு, உறவு.

Thursday 13 August 2015

எண்ணம், சொல், செயல்.

எண்ணம், சொல், செயல்.

வாழ்க வையகம்.-----------------------------------------வாழ்க வளமுடன்.


மனிதனிடம், மணமாக, பார்வையாக,  சொல்லாக அல்லது எண்ணமாக வெளியேறும் அலை எந்த வகையாக இருப்பினும் அவ்வலை அவனுடைய தன்மைகள் அனைத்தையும் எடுத்துச் செல்கின்றது. ஒவ்வொரு மனிதனும் முன் அனுபவத்தினால் ஏற்பட்ட பதிவுகளின் மூலம் செயல்படுவதினால் அவனைடைய எண்ணம், சொல், செயல், அனைத்தும் அவனைடைய பதிவின் அடிப்படையில் அமைந்திருக்கும். அவனூடைய நன்மைகள் யாவும் அலை மூலமாக வளிப்பட்கின்றது.


ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நல்ல பதிவுகளையும், தீய பதிவுகளையும்  பெற்றிருக்கிறான். ஆகவே, மனதின் நிலைக்கேற்ப அவனிடமிருந்து வரும் எண்ணம் சில நேரங்களில் நேர்மையான தாகவும், சில நேரங்களில் முரண்பாடுடையதாகவும் இருக்கின்றன  இங்கு நேர்மையான அல்லது முரண்பாடான எண்ணம் அது சென்று அடையக் கூடிய பொருள் அல்லது மனிதனைப் பொறுத்து அமைவது இல்லை.அவை யாரிடமிருந்து செல்கின்றனவோ அவர்களைடைய தன்மையைப் பொறுத்து அமைகின்றன.

இந்த விஞ்ஞானத்தை, தத்துவவத்தை அறிந்து கொள்ளாமல் நாம் எண்ணற்ற பதிவுகை ஏற்படுத்திக் கொண்டு அவற்றை நன்றாக வேரூன்றச் செய்து கொண்டோம். தேவையற்ற தீய பதிவுகளை நாம் ஊக்குவிக்கும் பொழுது அது மேலும் ஆழமாகப் பதிந்து நம் குணங்களை தீயபதிவுகளாகக் கட்டுப்படுத்துகின்றன. நேர்மையற்ற முரண்பாடான எண்ணங்களை மாற்றித் தீயபதிவுகளைக் களைவது சிறந்த ஆன்மீக முயற்சியாகும். தூய எண்ணம், சொல், செயல்களினால் இனிமையான நல்ல  அலைகள் ஏற்படுத்தும் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். ஒருவரை வாழ்த்துவதினால் ஏற்படும் நற்பயனை நாம் இங்கு தான் உணரமுடியும்.


-------------------------------------------------------------------அருள் தந்தை.



Wednesday 12 August 2015

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.



 வாழ்க வையகம்.------------------------------------------வாழ்க வளமுடன்.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.

ஒரு தீய எண்ணத்தை ஒரு முறை உள்ளே விட்டு விட்டால் போதும், மறுபடியும் உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று.

விருந்தாளி - வேண்டாத விருந்தாளியேயாயினும் - முகத்தைச் சுளித்தால் போய் விடுவார். எண்ணத்தை விரட்ட விரட்டத் தான் மீண்டும் மீண்டும் வரும். விரட்டும் போது நீங்கள்அந்த எண்ணத்தோடு தான் உறவு கொண்டவாறே இருக்கிறீர்கள் என்பதே இதற்குக் காரணம்.

அதுமட்டும் அன்று, வெறும் எண்ணம் மட்டுந்தானே, நான் என்ன செயலிலா இருக்கிறேன்? என்று ஒரு தீய எண்ணத்திற்கு இடங்கொடுத்து விடக் கூடாது. விளைவஞ்சி, அந்த எண்ணத்தின் வழி நீங்கள் செயலில் இறங்காமல் இருந்த விடலாம். ஆனால் எழுந்த எண்ணம் சும்மா போய் விடாது. ஒத்த தரம் உடைய இன்னொருவர் மனதில் நுழைந்து அது தனக்கு செயலுருவம் கொடுத்துக் கொண்டு விடும். அத்தகு ஆற்றல் பெற்றது எண்ணம்.

இன்னொன்று, செயலில் இறங்கமாட்டேன் என்று நிதானத்துடன் ஒரு தீய எண்ணத்திற்கு நீங்கள் இடம் கொடுத்தீர்களானாலும் திரும்பத் திரும்ப உங்கள் மனதில் தோன்றிச் செயலாக உருப்பெற உங்களிடத்திலேயே வேட்கையும், உந்துதலையும், தோன்றச் செய்து, செயலாக மாற்றம் பெற முனையும். இதனானெல்லாம் தான் ' உள்ளத்தால் உள்ளலும்தீதே, பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வே எனல்'  என்றும், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். என்றும் சொல்லியுள்ளார் வள்ளுவப் பெருந்தகை.

-----------------------------------------------------------------அருள் தந்தை.