நினைவுக்கு
எட்டாத காலமுதற்கொண்டே பருவநிலை, வாழ்க்கை முறை, இன்னும் இதர பழக்க வழக்கம்
ஆகியவற்றைக் கொண்டு பல்வேறு நாடுகளில் பலவகையான உடற்பயிற்ச்சிகள் உருவாகியுள்ளன.
முன்பு வாழ்க்கை முறை மெதுவாக ஊரும் (நகரும்) நிலியில் இருந்த தால் அதற்குத்
தக்கவாறு உடற்பயிற்சிகள் உருவாக்கப்பட்டன. அந்தக் காலம் இப்போது மாறிவிட்டது.
விரைவு, அழுத்தம், பரபரப்பு உள்ள சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம். நமது தேவைகளும்
வேறு விதமாகி விட்டன. ஆகவே, முந்தைய உடற்பயிற்சிகள் இந்தக்கால சூழ்நிலைகளுக்கு
ஏற்றவையாக.
இது சம்பந்தமாகப்
பல ஆண்டுகள் நான் சிந்தித்து வந்தேன். பல விதமான ஆசனங்களையும், உடற்பயிற்சிகளையும்
ஆராய்து பார்த்தேன். இப்பயிற்சிகளை நானே செய்து பார்த்து அதன் விளைவுகளை எனது உடல்
மூலம் தெறிந்து கொண்டேன். இந்திய மருத்துவத் துறையில் எனக்கு இருந்த அறிவு இந்த
ஆய்வுக்கு உதவியது. இருதியாக ஆடவருக்கும், பெண்டிருக்கும், குழந்தைகளுக்கும்,
பல்வேறு வாழ்க்கை நிலையில் இருப்பவர்களுக்கும், பல் வேறு கால நிலைக்கும் ஏற்றவாறு
சில பயிற்சிகளை ஒழுக்கு படுத்தியுள்ளேன். இந்தப் பயிற்சிகளை ஒழுங்காகச் செய்வதால்
உடலுக்குப் பிராணவாயு பரவி என்டோக்கிரின் சுரபிகள் இயக்கத்தை ஒழுங்கு படுத்தி,
இரத்தத்தை சுத்தப்படுத்தி அதன் ஓட்டத்தை ஒழுங்கு படுத்துகிறது.
நோய்
வராதபடி தடுப்பு நிலையை அதிகப்படுத்துகிறது. ஆரோக்கியமான உடம்பும், நீடித்த
ஆயுளும் உண்டாகின்றன. அதன் மூலம் ஆனமீக தேட்டத்தில் வெற்றி பெற்று நான் இந்த
மண்ணுக்கு எதன் பொருட்டு வந்தோமோ அதைத் தெளிவாகத் தெரிந்துகொள்கிறோம். இந்தப் பயிற்சிகளை ஒழுங்காகச்
செய்பவர்கள் நிச்சையம் நன்மை அடைவார்கள். எளிய முறை குண்டலினி யோகப் பயிற்சியில்
ஈடுபட்டுள்ளவர்கள் இந்தப் பயிற்சிகள் செய்து பழகுவதன் மூலம் பெரும் அளவில் நன்மை
அடையலாம். இந்தப் பயிற்சிகள் அதற்கு அதிக அளவு உதவியாய் இருக்கும்.