Thursday, 29 September 2011

குழந்தை வளர்ப்பு





குழந்தை வளர்ப்பு

ஒரு குழந்தையின் உற்பத்தியானது பெற்றோர்களுடைய உடல், உயிர், அறிவு இவற்றின் தரத்திற்கு ஏற்ற வாறுதான் அமையும். பெற்றோர்களுடைய வினைத் தொடரே குழந்தை, நல்ல குழந்தை வேண்டுமானால் பெற்றோர்கள் உடலை, உயிரை, அறிவைச செம்மையாகப் பேணிக் காக்கவேண்டும்.

தவம், உடற்பயிற்ச்சி, ஆராய்ச்சி இவற்றால் தங்களை உயர்த்துக் கொள்ள வேண்டும். அமாவாசை, பௌர்ணமி தினங்களிலும், போதைப் பொருட்களை உட்கொண்ட மயக்கத்திலும், இருவரில் ஒருவர் வருத்தமாகவோ நோயுற்றோ இருக்கும் நாளில் ஒரு குழந்தை கருத்த்தரிக்குமேயானால், அது உடலிலும், அறிவிலும், தரம் குறைந்த தாகவே அமையும்.

மேலும் குழந்தை கருவுற்றிருக்கும் காலத்தில் தாயின் மனம் உற்சாகமாக இருக்கம்படி அந்தக் குடும்பத்தினர் பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய அறிவிற் விழிம்பில் உற்பத்தியாகும் குழந்தை, உடல், அறிவு நலன்களோடு, குடும்பத்தினருக்கும், சமுதாயத்திற்கும் பெரும் நலம் விளைக்கத்தக்க நல்நிதியாக அமையும்.

பிறந்த பிறகும் வளர்க்கும் முறையில் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அந்தக் குழந்தை எந்த எந்தச் செயலில் ஈடுபடக்கூடாது என்று நினைக்கிறோமோ, அந்தச் செயல்களைப் பெற்றோர்கள் குழந்தையின் எதிரில் செய்யவே கூடாது. கடைசியாக மக்களுக்குச் சொத்துச் சேர்த்து வைக்க வேண்டும் என்பது இந்த விஞ்ஞான காலத்தில் அவசியமில்லை. அவர்களுக்கு, வாழ்வதற்கு ஏற்ற கல்வியைக் கற்பித்து வைத்தால் அதுவே அழிக்க முடியாத பெரும் சொத்தாகும்.
----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

---------------------------------------------------------------(தொடரும்)

Tuesday, 27 September 2011

கணவன்-மனைவி உறவு




கணவன்-மனைவி உறவு

மனித மனம் ஒரு வியப்பானது. ஒரு பொருளை விரும்பினால், அதனை அடையாத முன்னம் அதனிடம் பல நன்மைகளுயும், மேன்மைகளையும் கற்பித்துக் கொண்டு இன்புறுவது, அதை அடைந்த பின்னர் அதில் குறைகளைக் கற்பித்துக் கொண்டு சோர்வடைவது. இது விரிந்த நோக்கம் இல்லாதவர்களிடம் இயல்பாக இருக்கும். இந்தக் குறைக்கு நீங்கள் ஆளாக வேண்டாம். நல்லதையும் உயர்வையும் பாராட்டுங்கள். குறைகளை நுட்பமான முறையில் எடுத்து விளக்கவும், நிரைவு செய்யவும் முயலுங்கள். வாழ்வு வளம் பெறும்

கணவனை மனவியும், மனைவியை கணவனும் சிறப்புக் காணுமிடத்தும், உயர்வைக் கண்டு பாராட்ட வேண்டியது அவசியம். இது அன்பையும், நட்பையும் பெருக்கும், உறுதிபடுத்தும். இதனால், எப்போதுமே பாராட்டிக் கொண்டு இருக்க வேண்டுமென்பதில்லை, அப்படிச் செய்தால் அது முகத்துதியாக மதிப்புக் குறையும்.

ஒரு சில குடும்பத்தில் கணவனோ, மனைவியோ பலரால் பாராட்டப் படுவராயும், புகழப்படுபவராயும் இருக்கலாம். ஊர் பாராட்டுவதைப் போல், தன் வாழ்க்கைத் துணைவரும் பாராட்ட வேண்டும் என இதிர் பார்பார்கள். இங்கு மிக நுணுக்கமான உண்மை அடங்கி இருக்கிறது. வாழ்க்கைத் துணைவரை ஊர் புகழும்போது அந்தப் புகழ்ச்சியில் தான் மகிழ்வுற்றுத் திளைத்திருப்பார்கள். அது அவருடைய உரிய சொத்தாக விடுகிறது.

ஆதலால், தானும் புகழ வேண்டுமென்பது அர்த்தமற்றதாகி விடுகிறது. இந்த உண்மையை உணராதவர்கள், தன் வாழ்க்கைத் துணைவர் புகழவில்லையே என்று ஏக்கமும், வருத்தமும் அடைவார்கள். இது தேவையற்ற எண்ணம். ஊர் புகழும்போது மனைவியோ, கணவனோ புகழவில்லையே என்ற குறை எவரும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. அலட்சியம் செய்ததாக எடுத்துக் கொள்வதும் நல்லதன்று.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்.
---------------------------------------------------------(தொடரும்)

Monday, 26 September 2011

கணவன் – மனைவி நட்பு





கணவன் மனைவி நட்பின் மதிப்பை உணர்ந்து அதைக்காக்க வேண்டிய அவசியத்தை நினைவில் கொண்டால், மற்ற தேவையற்ற குறைபாடுகள் எழவே எழாது.  நமது மனவளக்கலையில் கணவன் மனவி இருவரும் ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொள்வதை அதிகமாக வலியுருத்தி வருகிறோம். நட்பயையும் அன்பையும் வளர்க்க வாழ்த்து ஒரு ஆற்றல் வாய்ந்த மந்திரமாகும்.

கணவன் மனைவி இருவருமே மனவளக்கலை பயின்றால் நல்ல பயன் கிட்டும், சில காரணங்களால் ஒருவருக்கு இக்கலையில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். அதனால் ஒருவரே ஒரு குடும்பத்தில் மனவளக்கலையில் ஈடுபட்டு வரலாம். எனினும், அந்த ஒருவர் சிறப்பாக இக்கலை பயின்று தன் தரம் உயர்த்தி மற்றவர்க்கு நலம் விளைத்தும், வாழ்த்தியும் வந்தால் நிச்சையம் அவரும் குறுகிய காலத்திலேயே இக்கலையில் விருப்பம் கொள்வார்கள்.

பல மக்கள் வாழ்வில்  தொடர்பு கொண்டு கண்ட உண்மைகளையும், என் வாழ்வில் கண்ட அனுபவங்களையும் வைத்துக் கொண்டே மேற்கண்ட அன்புரைகளை வழங்கியிருக்கிறேன். இரண்டு மூன்று தடவை திரும்பித் திரும்பி படித்து, ஆழ்ந்து சிந்தித்து உங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு நிறைவு பெருங்கள். எனது அனுபவ அறிவைத் தவிர வேறு என்ன நான் உங்களுக்குக் கொடுக்க முடியும்.

------------------------------------------------------------------------------அருள் தந்தை

வாழ்க வையகம்---------------------------------------------------வாழ்க வளமுடன்

-------------------------------------------------------------------------------------------(தொடரும்)

Saturday, 24 September 2011

தெய்வீக உறவு.




தெய்வீக உறவு.

குழந்தைபேறு உண்டாவதற்கு முன்னதாகவே கணவன் மனைவி உறவு எப்படி இருக்கவேண்டும் என்பதை நமது பண்பாட்டில் நாம் வளர்க்க வேண்டும். ஒவ்வொருக்கொருவர் பிணக்கு(Conflict Thoughts) எழாது உள்ள குடும்பத்தில் தான் குழந்தைகள் நன்றாக இருக்கும். அங்கு பிணக்கு இருக்குமேயானால் அடிப்படை சுதந்தரத்தையே அடக்கு முறையால் தடுக்கும் போக்கு, அதில் உள்ள போராட்டம் குழந்தைகளிடம் பாதிக்கும், மனம், உடல் நலம் கெட்டதாகத்தான் அமையும். இதை மிகவும் முக்கியமாகக் கண்காணிக்கின்ற போது, கணவனும் ஒத்துழைக்க வேண்டும்., மனைவியும் ஒத்துழைக்க வேண்டும்.. ஒருவருக்கொருவர் உள்ளத்தைப் புரிந்து கொண்டு, ஒருவருக்கொருவர் உதவி வாழ்வதற்காக வந்தாகி விட்டது. திருமணமும் ஆகிவிட்டது, இனி வாழ்ந்து தான் ஆகவேண்டும். ஒருவருக்கொருவர் உதவித்தான் ஆக வேண்டும் என்ற அளவிலே வந்து விட வேண்டும்.

அங்கு விட்டுக் கொடுப்தற்குப் பதிலாக ஒவ்வொருவரும் ஒரு விதமான பிடியைப் பிடித்துக் கொண்டு, என் கருத்துத் தான் உயர்ந்தது என்று வைத்துக் கொண்டால், பிணக்குத்தான் வரும். இதையெல்லாம் சரி செய்வதற்கு அகத்தவம் என்ற முறையிலே ஒரு தியான முறையை நல்ல முறையில் செய்து வந்தார்கள் என்றால் மயக்க நிலையிலிருந்து விழிப்பு நிலைக்கு வந்து சரி செய்து கொள்ளலாம்..
 ------------------------------------------------------------------------------அருள் தந்தை

வாழ்க வையகம்---------------------------------------------------வாழ்க வளமுடன்

--------------------------------------------------------------------------------------------(தொடரும்)

Tuesday, 20 September 2011

இயற்கையிலேயே தியாகிகள்




நம் நாட்டின் பண்பாட்டின்படி பார்த்தால் பெண்கள் இயற்கையிலேயே தியாகிகள் என்று சொல்லாம். ஏன் என்றால், அவர்கள் கணவன் வீட்டுக்கு வரும்போதே தாய், தந்தை,, பிறந்த வீட்டுச் சூழ்நிலை எல்லாவற்றையும் துறந்த்து விட்டுத்தான் வருகிறார்கள். திருமண வாழ்க்கையைத் தொடர்வதற்கு முன்பே துறந்து வரக்கூடிய ஒரு இயல்பு அவர்களுக்கு வந்து விடுகிறது.

அந்த அளவுக்குத் துறந்த பிறகு இங்கே அன்பு நாடிவந்த பெண்ணுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது அவசியம். சேர்ந்த இடத்திலே இந்த ஒரு பெரிய உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டியது ஆண்மக்களுடைய கடைமையாகும். சாதாரணமாக ஒரு மனைவி என்ற மதிப்பில் மாத்திரம் வேண்டியது அன்று. பெண்மை என்ற மதிப்பிலே, தாய்மை என்ற மதிப்பலே எல்லோருக்கும் கொடுக்கக்கூடிய மதிப்பைப் போல நம் வீட்டுக்கு வந்த பெண்ணுக்குக் கூட அந்த மதிப்பு உண்டு என்று பார்த்து நடந்து கொள்ளலாம் அல்லவா?

எல்லாம் சரியாகப் பார்க்கும் போது சாதாரணமாக ஆணுக்கு ஆண் என்ற நட்பிலே ஒரு எல்லை வரையில் தான் இருக்கும். ஆனால் கணவன் மனைவி உறவிலே இருக்கக்கூடிய இந்தப் பண்பாடு, தியாகம் இதைச் சரியாக உணர்ந்து நடப்பீர்களேயானால் அதைவிட ஒரு பெரிய இன்பம் இந்த உலகத்தில் வேறு இருக்க முடியாது. அதை நல்ல முறையில் காப்பாற்றிக் கொள்வதற்கு வாழ்த்தி, வாழ்த்தி அந்த வாழ்த்திலே வளம் காணலாம்.

 ------------------------------------------------------------------------------அருள் தந்தை

வாழ்க வையகம்---------------------------------------------------வாழ்க வளமுடன்

 (தொடரும்)