Sunday 9 October 2011

மனிதன்






மனிதன்

“அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது”. என்பது ஆன்றோர் வாக்கு. ஏன் அவ்வாறு கூறுகின்றனர்? மனிதன் ஒருவனால் தான் பிரவற்றைக் கண்டு நலன் உணர்ந்து அவைகளைப்போன்று போலி செய்து வாழ முடிகிறது. இயற்கைகளை மாற்றித் தன் வாழ்வின் மேம்பாட்டுக்குப் பயன் படுத்திக் கொள்ள முடிகின்றது. இவை எல்லாவற்றிக்கும் மேலாக, பிற எவருக்கும், எந்த ஒன்றுக்கும் இன்னல் பயவா இன்ப வாழ்வு வாழ முடிகின்றது. இவ்வாறு வாழ்வது தான் மனிதனின் இயற்கை.

எனவை தான், மனிதன் என்ற பெயறைப் பெற்றான். அதாவது எவன் ஒருவன் மனத்தை இதமாக வைத்துக் கொள்கிறானோ அவன் தான் மனிதன் என்ற பொருளில் இச்சொல் ஏற்பட்டுள்ளது. மனம் என்ற  சொல்லைப் பார்த்தால் அதுவும் இதே பொருளைத்தான் அழுத்த மாக உணர்த்துகின்றது. “மனம்” என்ற சொல் “மன்” என்ற வேர்ச்சொல்லின் அடியாகப்பிறந்தது. “மன்” என்றால் நிலையானது. அழியாமை என்று பொருள் ஆனால், நாமோ மனதைப் பேயாக, குரங்காக இருப்பதனை உணர்கிறோம்.

ஆனால், அதே மனத்தைத் தவத்தால், தற்சோதனையால், புறத்தே குதிக்காமல் அகத்தே ஆழ்ந்து ஆழ்ந்து தன்னையுணர்கின்ற மெய்யுணர்வு தோன்றிகிறது. அப்போதுதானே எல்லாவற்றுள்ளும், எல்லாமும் தன்னுள்ளும் இருப்பது உணரப்படுகின்றது. அந்த நிலையில் மனம் இதமாகிறது. இதனைத்தான் மனிதன் பெற வேண்டும்.

மனம் படைத்த மனிதன் (மன்+இதன்)  நிலைபேறான மெய்ப்பொருள் உணர்வு பெற்ற வாழ்வு வாழ வேண்டுமானால் மனம், மொழி, செயல் மூன்றிலும் இனிமை தொன்ற வாழ வேண்டும். இத்தகையவர்களைத்தான் வள்ளுவர் செம்பொருள் கண்டவர்கள் என்கிறார். மனதைத் தெளிந்து, மனம் நிலைத்து மக்களுக்கும் பிற உயிர் இனங்களுக்கும் மன இதமாய்த் தொண்டாற்றுகின்ற பெருமக்களே நிறை மனிதர்கள்.
----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்
----------------------------------------------------------------------(தொடரும்)

No comments:

Post a Comment