Tuesday 18 August 2015

ஆண்டவன் கணக்கு.


 வாழ்க வையகம்-------------------------------------------------வாழ்க வளமுடன்.


ஆண்டவன் கணக்கு

ஆண்டவனைக் கேட்டு இனிமேல் எதுவும் வாங்கிட முடியும் என்று நீங்கள் கணக்குப் போட்டால் அவன் ஏமாந்தவன் அல்லன். நீங்கள் செய்துவிட்டுக் கணக்குப் பார்த்து, எனக்கு இவ்வளவு கூலி கொடுக்க வேண்டும் என்று கேட்டாலும் கூடக் கணக்கு சரியாக வராது. முன்பு, பின்பு, செய்திருந்தால் கூடச் செயல் பாக்கி இருந்தால்  பிடித்துக் கொள்வான். அவனிடம் ஒரு நியதி இருக்கிறது. நீங்கள் என்ன செய்தீர்களோ, அந்த செயலின் விளைவாக, நல்லதையோ, கெட்டதையோ உங்கள் நோக்கத்திற்குத் தக்கவாறு, செய்யும் திறனுக்குத் தக்கவாறு, அவன் செயல் விளைவாகத் தருவான்.

நீங்கள் நல்ல நோக்கத்தோடு நல்ல முறையில் செய்தால், செய்த செயலின் விளைவு எல்லாம் நல்ல விளைவாகவே இருக்கும். அதுதான் அவன் கொடுக்கக்கூடிய வரம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இடத்தில், நல்ல செயலையே செய்தோமானால் எல்லாமே நலம் விளையும் என்கின்ற பொழுது சமுதாயத்திற்கு நலம் தரவேண்டும் என்பது ஒன்று ஆயிற்று, கடமை செய்கின்றோம் என்பது ஒன்று ஆயிற்று. இரண்டாவதாக, நல்லதையே ஒவ்வொரு செயலிலும் செய்து கொண்டே வந்தால் , இறைவனைடைய ஆற்றலை நாம் காணக்கூடிய அளவுக்கு ஒரு விழிப்பு நிலை வந்துவிடுகிறது.

பிறகு நான் இறைவனைத் தேடிக் கொண்டோ அல்லது, போற்றிக்கொண்டோ இருக்க வேண்டியதில்ல. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு இயக்கத்திலும் அவனுடைய இருப்பைக கண்டு கொள்ளலாம். ஆக இறைவனே உணர்ந்து கொளவது என்பது சமிதாயத்திற்கு நலம் தருவதாகும். இந்த இரண்டும்தான் எல்லா மதங்களுடைய அடிப்படையா நோக்கம். இந்த அடிப்படையான நோக்கம் வெற்றி பெறவேண்டுமானால் ஒவ்வொருவரும் நல்ல செயலைச் செயவதற்குப் பழகிக் கொள்ள வேண்டும், அதன்பிறகு செய்து பலன் காண வேண்டும். மற்றவர்களுக்கும் அதைப் பரப்ப வேண்டும்.

-----------------------------------------------------------------------------அருள் தந்தை.


No comments:

Post a Comment