Wednesday 12 August 2015

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.



 வாழ்க வையகம்.------------------------------------------வாழ்க வளமுடன்.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.

ஒரு தீய எண்ணத்தை ஒரு முறை உள்ளே விட்டு விட்டால் போதும், மறுபடியும் உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று.

விருந்தாளி - வேண்டாத விருந்தாளியேயாயினும் - முகத்தைச் சுளித்தால் போய் விடுவார். எண்ணத்தை விரட்ட விரட்டத் தான் மீண்டும் மீண்டும் வரும். விரட்டும் போது நீங்கள்அந்த எண்ணத்தோடு தான் உறவு கொண்டவாறே இருக்கிறீர்கள் என்பதே இதற்குக் காரணம்.

அதுமட்டும் அன்று, வெறும் எண்ணம் மட்டுந்தானே, நான் என்ன செயலிலா இருக்கிறேன்? என்று ஒரு தீய எண்ணத்திற்கு இடங்கொடுத்து விடக் கூடாது. விளைவஞ்சி, அந்த எண்ணத்தின் வழி நீங்கள் செயலில் இறங்காமல் இருந்த விடலாம். ஆனால் எழுந்த எண்ணம் சும்மா போய் விடாது. ஒத்த தரம் உடைய இன்னொருவர் மனதில் நுழைந்து அது தனக்கு செயலுருவம் கொடுத்துக் கொண்டு விடும். அத்தகு ஆற்றல் பெற்றது எண்ணம்.

இன்னொன்று, செயலில் இறங்கமாட்டேன் என்று நிதானத்துடன் ஒரு தீய எண்ணத்திற்கு நீங்கள் இடம் கொடுத்தீர்களானாலும் திரும்பத் திரும்ப உங்கள் மனதில் தோன்றிச் செயலாக உருப்பெற உங்களிடத்திலேயே வேட்கையும், உந்துதலையும், தோன்றச் செய்து, செயலாக மாற்றம் பெற முனையும். இதனானெல்லாம் தான் ' உள்ளத்தால் உள்ளலும்தீதே, பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வே எனல்'  என்றும், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். என்றும் சொல்லியுள்ளார் வள்ளுவப் பெருந்தகை.

-----------------------------------------------------------------அருள் தந்தை.

No comments:

Post a Comment